ஜெயலலிதா உயிரோடு இருந்தால் ஓபிஎஸ் மகனுக்கு சீட் கிடைத்திருக்குமா..? தெறிக்க விடும் ஸ்டாலின்..!

Published : Mar 27, 2019, 05:15 PM ISTUpdated : Mar 27, 2019, 05:28 PM IST
ஜெயலலிதா உயிரோடு இருந்தால்  ஓபிஎஸ் மகனுக்கு சீட் கிடைத்திருக்குமா..?  தெறிக்க விடும் ஸ்டாலின்..!

சுருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு சீட் வாங்கியவர் ஓபிஎஸ் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு சீட் வாங்கியவர் ஓபிஎஸ் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

 

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணனையும் ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். எப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை வைத்து அதிமுக அரசியல் செய்து வருகிறது.

 

மேலும் ஓபிஎஸ் மகன் என்ற தகுதியை தவிர அதிமுக வேட்பாளருக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா இருந்தால் தனது மகனுக்கு ஓபிஎஸ் சீட் வாங்கியிருப்பாரா என்றும் ஸ்டாலின் வினவினார். திமுக விருப்பப்படி ராகுல் காந்தி பிரதமர் ஆவார். திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், விவசாய பயிர்க் கடன், கல்விக் கடன் ரத்து, நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அவர் அளித்தார். ராகுல் காந்தி பிரமராகும் போது, திமுக அமைச்சரவையில் பங்கெடுத்து தமிழகத்திற்கு பல நன்மைகளை பெற்று தரப்படும் என உறுதியளித்தார். 

PREV
click me!

Recommended Stories

தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..
நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!