இரண்டே வழக்கு... அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு ஆப்பு... ஸ்டாலின் போடும் பக்கா ஸ்கெட்ச்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 22, 2021, 7:55 PM IST
Highlights

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் வழக்குகளை விசாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் வழக்குகளை விசாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஆட்சியில்  செய்யப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக செய்தி. இந்நிலையில் ஏற்கனவே முடிக்கப்படாமல் இருக்கும் முக்கியமான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தீவிரம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தாலும், முக்கிய ஆதாரங்களை அரசு தரப்பு திரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆட்சியில் 5 பேருக்கும் வலுவான ஆதாரங்கள் சிக்காததால் 5 பேர் மீதான குண்டர் சட்டமும் நீக்கப்பட்டது. அதனை அப்போதைய எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே முக்கிய ஆதாரங்களை திரட்டி வரும் தமிழக அரசு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது அதனை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அடுத்ததாக கடந்த 2017ம் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார். சயானும், மனோஜும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் அதிமுக முக்கிய புள்ளிகள் குறித்து வாக்குமூலம் பெறும் வேலைகள் தீவிரமாக நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு வழக்கிலும் பல அதிமுக தலைகள் சிக்கலாம் என்றும், அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

click me!