
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனவுலகில் சஞ்சரிப்பதாகவும், அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்து கொண்டு அனைத்து கட்சி
கூட்டத்தை தினமும் நடத்தி வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி வழக்கு தீர்ப்புக்கு எந்த அரசும் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்றார்.
காவிரி நீரை திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உண்டு. மு.க.ஸ்டாலின் கனவு உலகத்தில் சஞ்சரிக்கிறார். அறிவாலயத்தை தலைமை
செயலகமாக நினைத்து கொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை தினமும் நடத்தி வருகிறார்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி உரிமையை நிலைநாட்டி உள்ளது. காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலினால்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுகதான். அரசு
நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா.
காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காவிரி வழக்கில் வந்த தீர்ப்புக்கு எந்த அரசும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். ரஜினிகாந்துக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.