அடுத்து சிறைக்கு போகப்போவது ஸ்டாலின் தான்..! ஜெயக்குமார் வெளியிட்ட ஷாக் தகவல்..!

Published : Sep 06, 2019, 10:33 AM ISTUpdated : Sep 06, 2019, 10:40 AM IST
அடுத்து சிறைக்கு போகப்போவது ஸ்டாலின் தான்..! ஜெயக்குமார் வெளியிட்ட ஷாக் தகவல்..!

சுருக்கம்

ஆமாம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி ஒரு குண்டை தூக்கிப் போட்டார். பாருங்கள், ப.சிதம்பரம் சிறைக்கு சென்ற பிறகு ஸ்டாலின் மத்திய அரசை விமர்சிப்பதை குறைத்துக் கொண்டார். மத்திய அரசுக்கு எதிரான ஸ்டாலின் பேச்சில் ஒரு மென்மை தெரிகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் ஜெயிலுக்கு நாமும் செல்ல வேண்டி வரும் என்கிற பயம் தான் என்று அதிரடியாக கூறினார் ஜெயக்குமார்.

திமுக தலைவர் ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி என்பது போல் ஜெயக்குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா சிதம்பரத்தை தொடர்ந்து எதிர்கட்சி தலைவரும் சிறைக்கு செல்வார் என்றார். இதனை கேட்ட செய்தியாளர்கள் உடனடியாக யார் அந்த எதிர்கட்சி தலைவர் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் ஹெச்.ராஜா நடையை கட்டினார்.

 

திமுக தலைவர் ஸ்டாலின் தான் தற்போது எதிர்கட்சி தலைவர். எனவே அவரை மனதில் வைத்து தான் ஹெச்.ராஜா இப்படி பேசியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ஸ்டாலின் சிறைக்கு செல்வார்  என்று ராஜா கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ஆமாம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி ஒரு குண்டை தூக்கிப் போட்டார். பாருங்கள், ப.சிதம்பரம் சிறைக்கு சென்ற பிறகு ஸ்டாலின் மத்திய அரசை விமர்சிப்பதை குறைத்துக் கொண்டார். மத்திய அரசுக்கு எதிரான ஸ்டாலின் பேச்சில் ஒரு மென்மை தெரிகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் ஜெயிலுக்கு நாமும் செல்ல வேண்டி வரும் என்கிற பயம் தான் என்று அதிரடியாக கூறினார் ஜெயக்குமார்.

 

முதல் நாள் ஹெச்.ராஜாவும் இதே போன்றதொரு கருத்தை கூற மறுநாள் ஜெயக்குமாரும் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார். இதனால் எதற்காக ஸ்டாலினுக்கு சிறை என்பதை மையமாக வைத்து திடீரென தமிழக அரசியல் மடை மாற்றப்படுகிறது என்கிற குழப்பம் உடன்பிறப்புகளுக்கு எழுத் தொடங்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!
Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?