என் முகத்துலயே முழிக்காதீங்க..! மாவட்டச் செயலாளர்களிடம் கொதித்த மு.க.ஸ்டாலின்..! அண்ணா அறிவாலய தகிப்பு..!

By Selva KathirFirst Published Nov 12, 2019, 10:28 AM IST
Highlights

பொதுக்குழு உப்பு சப்பில்லாமல் நடந்து முடிந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு அக்கட்சியின் நிர்வாகிகளை கதி கலங்க வைத்துள்ளது.

பொதுக்குழு உப்பு சப்பில்லாமல் நடந்து முடிந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு அக்கட்சியின் நிர்வாகிகளை கதி கலங்க வைத்துள்ளது.

சென்னையில் கூறியபடி சரியாக காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் துவங்கியது. உடல் நலக்குறைவு காரணமாக இந்த கூட்டத்தில் துரைமுருகன் ஆப்சென்ட். ஆனால் மற்ற உயர் மட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டிருந்தனர். அண்மையில் கட்சியில் சேர்ந்தவர்களை கூட காண முடிந்தது.

வழக்கமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்றால் கார சாரமாகத்தான் இருக்கம். பெரும்பாலும் கலைஞர் தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே பேச அனுமதிப்பார். அதே பாணியில் ஸ்டாலினும் மிக மிக முக்கியமானவர்களை மட்டுமே பேச அனுமதித்தார். சம்பிரதாய விஷயங்கள் எல்லாம் முடிந்த பிறகு ஸ்டாலின் கடைசியாக பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுகள் எல்லாம் சுட சுட பறிமாறப்பட்ட சுண்டல் போல இருந்தது என்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள்.

தலைவர் இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தலைவர் பேசியதை பார்த்து மூத்த மாவட்டச் செயலாளர்கள் சிலரே நெளிய ஆரம்பித்துவிட்டனர் என்கின்றனர். அப்படி என்ன தான் ஸ்டாலின் பேசினார் என்றால், சர்ச்சைக்குரிய விஷயங்களை எல்லாம் கத்தரித்துவிட்டு பேப்பரை பார்த்து ஸ்டாலின் படித்ததை மட்டும் பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளனர். இது பற்றி விசாரித்த போது, ஸ்டாலின் அதிகம் பேசியது நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்து தான் என்று சொல்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக அரசுக்கு எதிரான அலை இருந்தது இதே போல் எடப்பாடி அரசு மீதும் கடும் அதிருப்தி இருந்தது. இதனால் கூட்டணி பலத்தோடு நாம் எளிதாக வென்றோம். திமுக நிர்வாகிகளின் உழைப்பால் தான் நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு வெற்றி கிடைத்தது என்று என்னால் முழுமையாக சொல்ல முடியாது. நிர்வாகிகள் உழைத்தார்கள் ஆனால் வெற்றிக்கு தேவையான அளவிற்கு உழைக்கவில்லை.

அதே நிலை தான் வேலூரிலும் கூட அங்கு மோடி எதிர்ப்பு அலை இருந்தது. அதனால் நாம் நூலிலையில் வென்றோம். ஆனால் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளும் அப்படி இல்லை. அங்கு அதிமுக நிர்வாகிகள் மிகச்சரியாக வேலை பார்த்திருக்கிறார்கள். நாம் கோட்டை விட்டுள்ளோம். எங்கு தவறு நடந்தது என்று எனக்கு தெரியும். இனி இப்படி ஒரு தவறு நடக்க கூடாது.

இதே நிலை நீடித்தால் தேர்தல் வெற்றி சாத்தியப்படாது. மக்களை தேடி நிர்வாகிகள் போக வேண்டும். திமுகவை தேடி மக்களை வரவழைக்க வேண்டும். உள்ளடி வேலைகள் என்பதையே மறந்துவிட வேண்டும். இனியும் உள்ளடி வேலைகள் தொடர்ந்தால் அதற்கு காரணமானவர்கள் யார் யார் என்று என்னிடம் பட்டியல் உள்ளது. அவர்களால் என் முகத்திலேயே முழிக்க முடியாது என்று கூறி ஸ்டாலின் முடித்ததாக சொல்கிறார்கள்.

click me!