வாயிலேயே வடை சுடுவதில் திறமைசாளி மு.க.ஸ்டாலின்... ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..!

By vinoth kumarFirst Published Dec 29, 2019, 5:30 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் 27-ம் தேதி நடைபெற்றது. 2-கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். 

அதிமுக அரசின் செயல்பாட்டை பாராட்டியே மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் 27-ம் தேதி நடைபெற்றது. 2-கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். 

ஆனால், மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவது யார் என்பதைப் பார்த்து அவர்களைத்தான் வெற்றிபெறச் செய்ய வேண்டும். தேனி மாவட்டத்தில், திமுக என்ன திட்டம் கொண்டுவந்தது? வாயிலேயே வடை சுடுவதுதான் திமுக. ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்சியைக் கவிழ்ந்து, குறுக்கு வழியில் முதல்வராகிவிடலாம் எனப் பல சூழ்ச்சிகளைச் மு.க.ஸ்டாலின் செய்தார். ஆனால், எதுவும் நிறைவேறவில்லை. 

சிறந்த ஆளுமை மிக்க மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளதை ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டியே மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக கூறினார். 

மேலும், தேர்தல் நேரத்தில் மட்டுமே திமுக மக்களைச் சந்திக்கிறது. மக்களைக் குழப்பி, வாக்குகள் பெற முயற்சி செய்கிறது. ஆயிரக்கணக்கான போராட்டத்தை நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். எதுக்கு எடுத்தாலும் போராட்டம் செய்வதையே ஒரு பொழப்பாக நடத்துகிறார். நேற்று என்ன போராட்டம் எதற்காக நடத்தினோம் என மு.க.ஸ்டாலினுக்கே தெரியாது என்று ரவீந்திரநாத் குமார் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

click me!