அழகிரி மேல கொல காண்டில் ஸ்டாலின்... ‘கமலுக்கு வக்காலத்து வாங்க இவரு யாரு? என்ன டபுள் கேம் ஆடுறீங்களா?

By Vishnu PriyaFirst Published May 14, 2019, 2:47 PM IST
Highlights

கமலுக்கு நீங்க ஏன் வக்காலத்து வாங்குறீங்க? கமல் பாசம் இன்னும் போகலையா, டபுள் கேம் ஆடி, எங்கள் வெற்றிக்கு வேட்டு வைக்கிறீங்களா? என அழகிரி மீது பாய்ந்துள்ளார்

’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே’ என்று கமல் பற்ற வைத்த பதபதைப்பு ராக்கெட் தாறுமாறாக பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைக்காக பி.ஜே.பி.யும், அவர்களோடு கூட்டணி வைத்த பாவத்துக்காக அ.தி.மு.க.வும் நம்மவரை ச்சும்மா குலுக்கி குலுக்கு குருமா செய்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் “கமல் சொன்னதை ஆயிரம் சதவீதம் ஆதரிக்கிறேன். சுதந்திர இந்தியாவின் பயங்கரவாதி மட்டுமல்ல, நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், ஹிந்து மகா சபை போன்றவற்றில் உள்ளவர்கள், மாற்று கருத்து உள்ளவர்களை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர்கள். ஐ.எஸ். எனும் பயங்கரவாதத்துக்கு இணையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.” என்று கமலுக்கு செம்ம ஜால்ரா தட்டிவிட்டார் தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி. 

இதில் செம்ம டென்ஷனாகி, கே.எஸ்.அழகிரி மீது பாய்ந்து, பறாண்டிவிட்டாராம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். 
இன்னாபா இது புது கதையா இருக்குது? இந்துக்களை அசிங்கப்படுத்துனதுக்காக கமலுக்கு கோயில் கட்டுற முதல் ஆளு ஸ்டாலின் தானே? அவரு எப்படி கோவப்படுவார்?ன்னு நீங்கள் கேட்கலாம். 

இந்த கேள்விக்கு விடை சொல்லும் அரசியல் பார்வையாளர்கள்....”மக்களே இது தேர்தல் நேரம். எனவே ஸ்டாலின் இப்படித்தான் கோவப்படுவார். தேர்தல் பட்டாசுக்கு திரிகிள்ளப்படும் வரை இந்துக்களை கிள்ளுக்கீரையாக பேசுவார். பட்டாசு வெடிக்க துவங்கியதுமே ‘என் மனைவி கோயில்களுக்கு போவதை நான் தடுக்க மாட்டேன். தி.மு.க.வில் உள்ளவர்களில் 90% பேர் இந்துக்கள்.’ அப்படின்னு சீனை மாற்றிப்போட்டு, இந்துக்களுக்கு ஒத்து ஊதுவார். இதுதான் அவரது குணம். 

கடந்த நாடாளுமன்ற தேர்தல், 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல், இப்போது நடக்க இருக்கும் 4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க.வுக்கு எதிராக வைக்கப்பட்ட ‘இந்து எதிரி’ எனும் பிரசாரத்தை உடைக்க ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் படும் பாடுகள் அசாதாரணமானவை. இந்துக்களின் ஓட்டு வங்கி தங்களை எதிர்த்துவிடகூடாது என்பதற்காக ‘நான்கு தொகுதிகளிலும் முருகனின் பெயரை கொண்ட நபர்களே எங்களின் வேட்பாளர்கள்.’ என்று துரைமுருகன் பேசியிருப்பதெல்லாம் பெரியாரை அசிங்கப்படுத்தும் அஸ்திரங்கள். 

ஆக ஓட்டு வங்கிக்காக இப்படி இந்துக்களின் காலில் தி.மு.க. சாஸ்டாங்கமாக விழுந்து கிடக்கும் நிலையில், கமலின் இந்துவிரோத கருத்துக்களுக்கு அழகிரி சாமரம் வீசியிருப்பதை எப்படி ஸ்டாலினால் பொறுக்க முடியும்? இதையே விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு பி.ஜே.பி., அ.தி.மு.க. ஆகியவை ‘பாருங்கள் தி.மு.க. கூட்டணியும் கமலை ஆதரிக்கிறது. எனவே 4 தொகுதிகளிலும் தி.மு.க. 

வேட்பாளர்களை எதிர்த்து வாக்களியுங்கள் டியர் இந்துக்களே.’ அப்படின்னு பிரசாரத்தை துவக்கினால், நிலைமை கோவிந்தாதான். அதனால்தான் ஸ்டாலின், அழகிரி மீது ’ கமலுக்கு நீங்க ஏன் வக்காலத்து வாங்குறீங்க? கமல் பாசம் இன்னும் போகலையா, டபுள் கேம் ஆடி, எங்கள் வெற்றிக்கு வேட்டு வைக்கிறீங்களா? என பாய்ந்துள்ளார்.” என்கிறார்கள். 
என்னா அரசியல்டா! ச்சை..

click me!