ஸ்டாலினுக்கு எதிராக மு.க. அழகிரியுடன் கை கோர்த்த மு.க. முத்து!

Published : Sep 06, 2018, 11:49 AM ISTUpdated : Sep 09, 2018, 08:29 PM IST
ஸ்டாலினுக்கு எதிராக மு.க. அழகிரியுடன் கை கோர்த்த மு.க. முத்து!

சுருக்கம்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தற்போது மு.க. அழகிரியுடன் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவும் கை கோர்த்துள்ளார்.

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தற்போது மு.க. அழகிரியுடன் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவும் கை கோர்த்துள்ளார்.

கருணாநிதி மறைவுக்கு பின் தாம் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்த்தார் மு.க. அழகிரி. ஆனால் அழகிரியை அனுமதிக்கவே கூடாது என்பதில் ஸ்டாலின் குடும்பம் திட்டவட்டமாக இருந்தது.

இதனால் தமது பலத்தைக் காட்டும் வகையில் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணியை நடத்தினார் அழகிரி. இந்த பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் சில ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டது அழகிரி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்த நிலையில் கருணாநிதியின் மூத்த மகனான மு.க. முத்து இப்போது அழகிரியுடன் கை கோர்த்திருக்கிறார். அழகிரியின் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்து கைப்பட கடிதம் ஒன்றை மு.க. முத்து அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்'  மு.க.முத்து' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்