செய்தியே வெளியிடாத செய்தி சேனலுக்கும் நன்றி சொன்ன அழகிரி!

By sathish kFirst Published Sep 5, 2018, 1:21 PM IST
Highlights

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மு.க அழகிரி தலைமையில்  நடந்தப் பேரணி மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி முடிந்துள்ளது.

இன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி உள்ளார். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி முடிந்துள்ளது.

ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கப்பட்ட இந்த அமைதிப் பேரணிக்கு சுமார் ஒரு லட்சம்பேர திரளுவார்கள் என நம்பிக்கொண்டிருந்த அழகிரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆமாம்  பேரனை தொடங்கும் நேரம் வரை அதிகமாக கூட்டம் வராததால் அழகிரி கொஞ்சம் அப்சட்டகவே இருந்துள்ளார். இதனால் இன்று காலை 10 மணி அளவில் பேரணி நடத்த திட்டமிட்டு, 11.30க்கு பேரணி தொடங்கியது.  

சுமார் ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்று அழகிரி  கூறியிருந்தார். இதனால் 3 துணை ஆணையர்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.  

இந்தப்  அழைத்துவரட்டவர்கள் அனைவருமே அழகிரியின் விசுவாசிகள். வந்தவர்களுக்கு ஒரே நிற டீ சர்ட் மட்டுமே அணிந்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் கருப்பு நிற டீ சர்ட் வாங்கி தரப்பட்டுள்ளது.  இந்த டீ ஷர்ட்டில்  அழகிரி புகைப்படம், சிறிதாக கருணாநிதி புகைப்படம் உள்ளது. பின்பக்கம் தயாநிதி அழகிரி  படம் உள்ளது.  ஆனால் திமுகவின் பெரும் தலைகலான அறிஞர் அண்ணா, பெரியார் புகைப்படம் கூட இல்லை. 

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி தலைமையில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட உள்ளது. இன்று காலை 11 மணி அளவில்  தொடங்கிய இந்த அமைதி பேரணி உண்மையில் அத்தனை அமைதி பேரணி இல்லை,  ஆமாம், அஞ்சலி செலுத்தும் அமைதி பேரணி என சொல்லிவிட்டு பறை இசை கலைஞர், பேண்ட் வாத்தியக்காரர்கள் இந்த அமைதிப் பேரணியை  அதிரவைத்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முக அழகிரி,  கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை  எனக் கூறினார். மேலும் பேசிய அவர், இந்தப் பேரணிக்கு வருகைதந்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் அதேபோல பேரணியை லைவ் வாக ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

உண்மையில் சொல்லவேண்டு மென்றால் பேரணியை தொலைகாட்சிகளில் லைவ் டெலிகாஸ்ட் செய்ய முயற்சி செய்து வந்த அழகிரி கனவில் மண்ணை போட்டுவிட்டது ஐடி ரெய்டு. ஆனால் வஞ்சனை இல்லாமல் அனைத்து தொலைகாட்சிகளுக்கும் நன்றி சொல்லியுள்ளார்.

click me!