நண்பர்கள் என நம்பியவர்களே இப்படி கோஷ்டி மாறிய ஷாக் சம்பவம்... அதிருப்தியில் மனம் மாறிய அழகிரி!!

By sathish kFirst Published Aug 30, 2018, 5:17 PM IST
Highlights

ஸ்டாலின் தன்னை கட்சியில் சேர்த்து கொள்ளவில்லை என்பதனால் தான் அழகிரி இவ்வாறெல்லாம் பேசி இருக்கிறார் என ஏற்கனவே கூறி இருந்தது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

திமுகவின் தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு அழகிரியின் வேகம் தற்போது குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. செப்டம்பர் 5ல் அழகிரி நடத்த உள்ள இரங்கல் ஊர்வலத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு அவர்க்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது போல சவாலாக பேசி வந்த அழகிரி தற்போது நடந்த பொதுக்குழு கூட்டத்தை பார்த்த பிறகு நொந்து போயிருக்கிறார். 


கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் திமுக தலைவர் ஆக போகி றார் என்பது உறுதியாக இருந்தாலும், அதற்கு என சிலராவது எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்த்தார் அழகிரி. அவ்வாறு எதிர்ப்பவர்களை எல்லாம் தன் பக்கம் சேர்த்து பக்காவாக ஒரு ஆர்மியை ரெடி செய்துவிடலாம் என காத்திருந்தவருக்கு தற்போது மிகப்பெரிய அளவிலான ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. பாசக்காரரான அழகிரி இது வரை பலருக்கு தன்னாலான உதவிகளை செய்திருக்கிறார். 

அவரின் உதவியால் அரசியல் முன்னேறியவர்கள் பலர் இப்போது திமுகவில் இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் , சட்ட மன்ற தேர்தல் என தேவையான சமயத்தில் அழகிரியிடம் உதவி பெற்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இப்போது இருப்பார்கள் என எதிர்பார்த்தவருக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. அவரவர் தங்கள் நலனுக்கு எது சரி என்பதை தான் யோசித்து நடைமுறிப்படுத்தி இருக்கின்றனர்.
 அவருக்கு நெருங்கிய வட்டம்கூட இப்போதெல்லாம் அவரி கண்டால் தள்ளி தான் நிற்கின்றனர். அவருக்கு நெருக்கமான பலரை அவர் சந்திக்க விரும்பி அழைத்த போது கூட நேக்காக போக்கு காட்டி இருக்கின்றனர் சம்பந்தப்பட்டோர். 

யாரெல்லாம் ஸ்டாலினின் பதவி ஏற்புக்கு எதிர்ப்பு காட்டுவார்கள் என அழகிரி நினைத்தாரோ அவர்கள் தான் அந்த விழாவில் மிகவும் மகிழ்ச்சியாக வழி மொழிந்திருக்கின்றனர்.  நண்பர்கள் என்று நம்பியவர்களே இப்படி மாறி இருப்பதால் அதிருப்தி அடைந்திருக்கும் அழகிரி இப்போது செப்டம்பர் 5 ஊர்வலம் கூறித்து என்ன முடிவு செய்வது யார் யார் இதில் கலந்து கொள்வார்கள் என எதுவும் உறுதியாக தெரியாமல் குழம்பி போயிடுக்கிறார்.

ஸ்டாலின் தன்னை கட்சியில் சேர்த்து கொள்ளவில்லை என்பதனால் தான் அழகிரி இவ்வாறெல்லாம் பேசி இருக்கிறார் என ஏற்கனவே கூறி இருந்தது அவருக்கு நெருங்கிய வட்டாரம். இப்போது கூட சூழல் தனக்கு சாதகமில்லாமல் இருப்பதை உணர்ந்த அழகிரி ஸ்டாலினை தானும் தலைவராக ஏற்று கொண்டதாக அறிவித்துவிடலாமா எனும் சிந்தனையில் இப்போது இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் செப்டம்பர் 5க்கு முன்னரே இன்னொரு பேட்டியை அழகிரி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

click me!