நான் யாருன்னு காட்டுறேன்... நாள் குறித்த அழகிரி! உச்சகட்ட பரபரப்பில் திமுக!

By sathish kFirst Published Aug 16, 2018, 2:51 PM IST
Highlights

கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அழகிரி தாது அதிரடி நடவடிக்கைக்கு நாள் குறித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்து ஒரு வாரம் தான் நிறைவடைந்திருக்கிறது. ஆனால் அதற்குள் திமுகவில் பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவரை அமைதியாக இருந்த அழகிரி கலைஞர் காவேரி மருத்துவமனையில் இருந்த போதே தன்னுடைய வேலைகளை காட்ட துவங்கி இருக்கிறார். திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என சமீபத்தில் கூடிய திமுக செயற்குழு கூட்டம் சொல்லாமல் சொல்லிவிட்டது.

அதே நேரத்தில் திமுக உடையப்போகிறது. திமுக விசுவாசிகள் என் பக்கம் என்று புதிய பாதையில் போய்க்கொண்டிருக்கிறார் அழகிரி. அவர் திமுகவில் இல்லாத காரணத்தால் அவர் பேசும் எதையும் கண்டு கொள்ள வேண்டாம் என்பது போல ஸ்டாலின் இருந்தாலும் ஒரு பக்கம் அழகிரியின் செயல்களால் செயல் தலைவர் கடுப்பாகி தான் இருக்கிறார்.

இந்நிலையில் அழகிரி கலைஞருக்காக இரங்கல் ஊர்வலம் ஒன்றிர்க்கு சென்னையில் ஏற்பாடு செய்திருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் இந்த ஊர்வலத்திற்கு அவரின் அன்பு தம்பிகள் அனைவரையும் அழைத்திருக்கிறார்.

இந்த ஊர்வலம் வெறும் இரங்கல் ஊர்வலம் மட்டும் தானா? அல்லது அவரது அரசியல் பயணத்துக்கான ஆரம்ப ஊர்வலமா என்று இனி தான் தெரியப்போகிறது 

”அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்ணன் அஞ்சாநெஞ்சரின் தலைமையில்” 05.09.2018 அன்று சென்னையில் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சாநெஞ்சரின்  அன்பு தம்பிகளாய் பாசத்தலைவனுக்கு மௌன அஞ்சலி ஊர்வலம் ஒன்றினைவோம் வென்றுகாட்டுவோம் . என்று இந்த ஊர்வலத்திற்கான அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ”ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்” எனும் வரிகள் அழகிரியின் அரசியலுக்காகவே எழுதப்பட்ட வரிகள் போல அமைந்திருக்கிறது. இரங்கல் ஊர்வலத்துக்கான வரிகள் போல இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

click me!