சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதும் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் நேற்று சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று பொன்முடி சந்தித்தார். அப்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- பொன்முடிக்கு 30 நாட்கள் அவகாசம்... சரணடையாவிட்டால் நடவடிக்கை எடுங்கள்- விழுப்புரம் கோர்ட்டிற்கு பறந்த உத்தரவு
இந்நிலையில் இன்றைய தினம் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள பொன்முடி வீட்டிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மு.க.தமிழரசுஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.