சசிகலாவின் பேத்திக்கு போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து சொன்ன அமைச்சர்கள்!! சசிக்கு தலைமையை தரவும் தயாராம்!!

By Selvanayagam PFirst Published Feb 13, 2019, 8:41 PM IST
Highlights

உங்களுக்கு நிச்சயம் நியாபகமிருக்கும்! கடந்த 9-ம் தேதியன்று சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக்குக்கு பெண் குழந்தை பிறந்துள்ள சேதியை....’ஜெயலலிதாவுக்கு பேத்தி பொறந்தாச்சு! ஆனந்த் கண்ணீரில் சசி’ எனும் தலைப்பில் நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

அந்த குழந்தைக்கு சசிகலாவின் விருப்பப்படி ‘ஜெயலலிதா’ என பெயரிட விவேக் முடிவு செய்துள்ளார். கூடிய விரைவில் நடைபெற இருக்கும் இந்த பெயர் சூட்டு வைபவத்துக்கு சசிகலா பரோலில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்படி சசி பரோலில் வந்தால் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வைக்கப்போகும் கூட்டணி உள்ளிட்ட பல விஷயங்களில் பெரும் மாற்றங்கள் நிகழும், அ.ம.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைவதற்கான சூழல்கள் கூட உருவாகும் என்று எடப்பாடி - பன்னீர் வட்டாரங்கள் படபடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 
இந்நிலையில், சசிகலாவின் பேத்தி பிறந்த அன்று நிகழ்ந்த எக்ஸ்க்ளூசிவ் விஷயமொன்று இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அது என்ன?....
அதாவது விவேக்கிற்கு குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அவரது மொபைல் லைனுக்குன் வரிசையாக வர துவங்கினார்களாம் அ.தி.மு.க. அமைச்சர்கள். குறைந்தது பத்து அமைச்சர்களாவது அழைத்தார்களாம். அதில் சிலர்  உருகிப்போய் ‘தம்பி நீங்க ஆசைப்பட்ட மாதிரியே, அம்மாவே உங்களுக்கு மகளா பொறந்திருக்காங்க. மனசார வாழ்த்துறேன். நல்ல காலம் பொறந்துடுச்சு. பிரிஞ்சு கிடக்குற நம்ம கழகம் மீண்டும் இணையணும்னா அது இந்த குட்டி அம்மாவின் (விவேக்கின் மகள்தான்)ஜாதகம் மூலமாதான் நடக்கும். மறுபடியும் நம்ம கட்சியோட தலைமை மாறணும், அந்த தலைமை சின்னம்மாவாகவே இருந்துட்டா இனி கழகத்தோட வெற்றியை எவனாலேயும் தடுக்க முடியாது.’ என்று பொங்கிவிட்டாராம். 

விவேக்கால் இதையெல்லாம் நம்பவே முடியவில்லையாம். ஆனாலும் அது உண்மைதான். 
பாப்பா பொறந்த சேதி சசிகலாவுக்கு போன அதே கையோடு, அமைச்சர்கள் இப்படி லைன் கட்டி வாழ்த்துவதும் சென்றதாம். 


சின்னம்மாவின் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்?...’நான் சொல்லல! இவங்களெல்லாம் என்னைக்குமே என் விசுவாசிகள்தான்னு!’ என்று அலட்சியமா சிரிச்சிருப்பார், அப்படித்தானே? 

click me!