கோயில் கோயிலாக சுற்றும் அமைச்சர்கள்... 2ம் தேதி வரை அடங்காத பி.பி..!

Published : Apr 24, 2021, 03:32 PM IST
கோயில் கோயிலாக சுற்றும் அமைச்சர்கள்... 2ம் தேதி வரை அடங்காத பி.பி..!

சுருக்கம்

 சமீபத்தில் திருப்பதிக்கு விசிட் அடித்த அவர், அப்படியே திருச்செந்தூருக்கும் ஒரு எட்டு வைத்துள்ளார். என்ன தான் இருந்தாலும் திருச்செந்தூர் சூரசம்ஹார ஸ்தலம். 

யார் தலை தப்பும் என்கிற பயத்தால் அமைச்சர்களுக்கு பிபி எகிறிக் கிடக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தவரை அமைச்சர் பதவி எப்போது காலியாகும் என்ற பயம் தான் இருக்கும். ஆனால், இந்தத் தேர்தலில் தப்பிப் பிழைப்போமா? அரசியல் எதிர்காலம் நிலைக்குமா? என்கிற அச்சம் தான் பலரையும் ஆட்டிப் படைப்பதாகக் கூறுகிறார்கள். 

பல அமைச்சர்கள் ஆடிட்டர்கள் உதவியை நாடி இருப்பவற்றை பத்திரப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். சிலர் யாகம், பூஜை, வழிபாடு என சுற்றுகின்றனர். எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். சமீபத்தில் திருப்பதிக்கு விசிட் அடித்த அவர், அப்படியே திருச்செந்தூருக்கும் ஒரு எட்டு வைத்துள்ளார். என்ன தான் இருந்தாலும் திருச்செந்தூர் சூரசம்ஹார ஸ்தலம். உட்கட்சி எதிரிகளை வீழ்த்த இந்த ஸ்தலம் தான் சிறந்தது என்பதால் திருச்செந்தூர் வந்த அவர் சத்ரு சம்ஹார மூர்த்தியையும் வழிபட்டார்.

எல்லாம் மே 2ம் தேதியை மனதில் வைத்து தான் என்கிறார்கள். இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள், ‘’2 முறை வெற்றி பெற்ற அண்ணன், தற்போது ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா என நினைக்கிறார். அதற்காக தான் கோயில், கோயிலாக வலம் வருகிறார்’’ என்கின்றனர். அவர் வந்து சென்ற சிறிது நேரத்தில் ஒரு பெண் அமைச்சரும் வழிபட்டுச் சென்றிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்துக்கு அனைவருமே தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கின்றனர் என்கிறார்கள் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.
 

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!
India Independence: இந்திய சுதந்திரம் உலக விடுதலைக்கு வித்திட்ட கதை! இதன் பிறகு எத்தனை நாடுகள் சுதந்திரம் பெற்றன தெரியுமா?