ஸ்டாலின் கூறுவது எல்லாம் பொய்...! தொடர்ந்து அவதூறு பேசினால் நீதிமன்றத்தை நாடுவோம்: அமைச்சர் தங்கமணி

By vinoth kumarFirst Published Sep 20, 2018, 2:01 PM IST
Highlights

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வந்தால், நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின்சார துறை அமைச்ச்ர தங்கமணி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு மின்சார வாரியம் பணம் கொடுத்ததாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் ஏற்கனவே கூறியதுபோல், யாரோ எழுதி கொடுத்த அறிக்கையை சரிபார்த்து, அறிக்கையை வெளியிட வேண்டும். ஆளும் கட்சி மீது எதிர்கட்சி தலைவர் உண்மைத் தன்மை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். ஆனால், இந்த அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும்.

 

எல்லா துறைகளிலும் ஊழல் என்று குற்றம் சாட்டு சொல்ல வேண்டும் என்பதற்காக நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக வெளியிட்டுள்ளார். காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று சொல்லியிருக்கிறார். தலைமை பொறியாளர், எங்களுக்கு அறிக்கை அனுப்பியது போல், நவம்பர், டிசம்பர் மாதங்களின்போது காற்றாலை மின்சாரம் இருக்காது என்பது ஏன் அவருக்கு தெரியவில்லை என்று எனக்கு தெரியவில்லை. 

யாராவது எழுதி கொடுக்கும் அறிக்கையை சரிபார்க்காமல் மு.க.ஸ்டர்லின் தவறான தகவலை தெரிவித்துள்ளார். தனியார் உற்பத்தி செய்கின்ற அனல் மின் நிலையத்தில் இருந்து வேறு தனியார் நிறுவனம் வாங்கியதாக காட்டியிருக்கிறார்கள். தவிர மின்சார வாரியத்தில் இருந்து எந்த பணமும் வாங்கவில்லை.

அதிமுக ஆட்சி மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தவறு செய்தவர்கள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது போன்று தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வந்தால், நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.

click me!