அண்ணாவுக்கு வந்த நிலைமை தான் கருணாநிதிக்கும்... திமுகவை கிழித்து தொடங்கவிடும் அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Sep 7, 2019, 5:04 PM IST
Highlights

வெளிநாடு அழைத்து செல்லாததால் அமைச்சர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை, ஜெயலலிதா இருக்கும் போது 2015-ல் என்னை வெளிநாடு செல்ல அனுமதித்தார், அப்போது வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டு என் பயணம் தடையானது என குறிப்பிட்டார். 

பேரறிஞர் அண்ணாவை மறந்தது போல விரைவில் திமுக தலைவர் கருணாநிதியையும்  திமுகவினர் மறந்து விடுவார்கள். மேலும், சமீபகாலமாக திமுகவினர் அச்சிடக்கப்படும் போஸ்டர்களில் அண்ணாவையும், கருணாநிதியும் பெயரும் இடம்பெறுவதில்லை என்பதை அமைச்சர் செல்லூர் ராஜு சுட்டிக்காட்டியுள்ளார். 

மதுரை ஜெய் ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் அருகே 90-வது வார்டில் 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூஜையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக கூட்டணியில் நிலவும் குழப்பம் குறித்து தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றார்.

 

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் திமுக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு, திமுகவினர் உறுப்பினர்களை சேர்ப்பதில் தவறில்லை, ஆனால் எங்கே போய் 2 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பது, வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதிதான் செய்ய வேண்டும் என விமர்சனம் செய்துள்ளார். 

ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அருமையான திட்டம் என்றும் அதை விமர்சிக்க கூடாது எனவும் தெரிவித்த அமைச்சர், கோப்பு கையெழுத்தாகும் முன் எதிர்கட்சிகள் குதிப்பதாக விமர்சித்தார். ஒரே ரேசன் அட்டை திட்டம் மூலம் மற்ற மாநிலத்திலிருந்து வருவோருக்கு அரிசி அல்லது கோதுமை மட்டுமே வழங்குவோம். மற்ற மாநிலத்தவருக்கு பிற பொருட்கள் கிடையாது. மத்திய தொகுப்பிலிருந்து அவர்கள் அரிசி வழங்குகிறார்கள் அதை அவர்களுக்கு வழங்க போகிறோம், அந்தந்த மாநிலத்தில் என்ன விலையோ அந்த விலைக்கு தான் அரிசி, கோதுமை வழங்கப்படும்.

 

வெளிநாடு அழைத்து செல்லாததால் அமைச்சர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை, ஜெயலலிதா இருக்கும் போது 2015-ல் என்னை வெளிநாடு செல்ல அனுமதித்தார், அப்போது வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டு என் பயணம் தடையானது என குறிப்பிட்டார். ராதாரவி அதிமுகவில் இணைந்தவர் என்றாலும் ரஜினி குறித்த அவரது கருத்து பற்றி எதுவும் கூற முடியாது என்றும் ராதாரவி இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை.மேலும் அவர் பேசுகையில் விரைவில் அண்ணாவையும், கலைஞர் கருணாநிதியையும் திமுகவினர் விரைவில் மறந்துவிடுவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!