இவரு பெரிய யோக்கியரு.. ஊழல் பத்தி பேச வந்துவிட்டாரு.. ஆ.ராசாவை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!

By vinoth kumarFirst Published Dec 7, 2020, 12:26 PM IST
Highlights

பொறாமையுடன் எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என கனவு காணும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

பொறாமையுடன் எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என கனவு காணும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் கடந்த 1ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்த கட்சி திமுக என்று விமர்சித்தார். மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அலைக்கற்றை வழக்கில் சிக்குவார்" எனச் சாடினார்.

இதற்குப் பதில் அளித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, "2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டார்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன் எனச் சவால் விடுத்தார். இதன் பின்னர் அதிமுகவிலிருந்து பதில் வராத நிலையில் சேலத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசினார். நேருக்கு நேர் விவாதிக்க ஆ.ராசா விடுத்த சவாலை ஏற்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா?, ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்று ஆ.ராசா கேட்டு 3 நாளாகியும் முதல்வர் பழனிசாமி வாய் திறக்கவில்லை. அப்படி தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், ஆண்மை இருப்பது உண்மை, என்றால் ஆ.ராசாவிடம் தேதி குறியுங்கள்; வரத்தயார் என ஸ்டாலின் காட்டமாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், விருதுநகரில்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி;- 2ஜியில் ஊழல் செய்த பணத்தைப் ஆ.ராசா பதுக்கி வைத்துள்ளார். அதனால்தான் ராசாவை கூடவே வைத்துள்ளார் ஸ்டாலின். ஆ.ராசா விவாதத்துக்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வர வேண்டும்? நான் வருகிறேன். திமுக தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

பொறாமையுடன் எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என கனவு காணும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்றார். எடப்பாடியைப் பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன யோக்கியதை உள்ளது? ஜெயலலிதாவையோ, எடப்பாடியையோ பற்றி பேச ஸ்டாலினுக்கோ, ஆ.ராசவுக்கோ தகுதியில்லை.

நாங்கள் சொத்துப் பட்டியலை தற்போதே வெளியிடுவோம். உச்ச நீதிமன்றத்தின் முன்பே சமர்ப்பிப்போம். ஆ.ராசாவால் சொத்துப் பட்டியலை வெளியிட முடியுமா? மோட்டார் சைக்கிள்கூட இல்லாமல் இருந்த ஆ.ராசா தற்போது எப்படி வெளிநாட்டு காரில் செல்கிறார். காங்கிரஸிடம்தான் திமுக அடமானத்தில் உள்ளது. நாங்கள் பாஜகவிடம் கட்சியை அடமானம் வைக்கவில்லை. பாஜகவினர் செய்யும் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறோம்" என்றும் கூறினார்.

click me!