எடப்பாடியை நடுங்க வைத்த அமைச்சர்...! ஒரே தூக்காக தூக்கியதால் பரபரப்பு...!

Published : Aug 17, 2019, 05:23 PM ISTUpdated : Aug 17, 2019, 05:33 PM IST
எடப்பாடியை  நடுங்க வைத்த அமைச்சர்...! ஒரே தூக்காக தூக்கியதால் பரபரப்பு...!

சுருக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவுக்கு பயணம் மேற்க்கொள்ள உள்ளதாக கூறிய அவர் முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றியடையும் என்றும் முதலமைச்சரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நிலை நாட்டப்படும் என்றும் அவர் கூறினார். 

முதலீடுகளை ஈர்க்க செல்லும் முதலமைச்சரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரும் குடிமராமத்து பணிகளை இன்று  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிமராமத்துப்பணிகளில் தமிழக அரசு அதிகவனம் செலுத்திவருவதாக கூறினார் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக  தமிழக அரசு உள்ளதாக அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், அதற்காக தமிழகத்தில் தொழிற்ச்சாலைகளை ஏற்படுத்தும் முயற்ச்சிகளிலும்  அரசுயிறங்கியுள்ளதாக கூறினார். அதற்கான முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவுக்கு பயணம் மேற்க்கொள்ள உள்ளதாக கூறிய அவர் முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றியடையும் என்றும் முதலமைச்சரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நிலை நாட்டப்படும் என்றும் கூறினார். அத்துடன் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் தேசிய பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளன என்றார்,  நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும். என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!