எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய அமைச்சர்..!! ஏகோபித்த ஆதரவு இருப்பதாக கூறிய கருத்தால் பரபரப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2020, 11:17 AM IST
Highlights

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை, இச்சட்டம் விவசாயிகளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை எனவும், இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த விவசாயிகளும் இச்சட்டத்தை எதிர்த்து வரும் நிலையில் அமைச்சரின் கருத்து விவசாயிகள் மத்தியில் கடும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சட்டத்தின் மூலம் விவசாயத்தையும், விவசாயிகளையும் அடியோடு அழிப்பதுடன், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை அடமானம் வைப்பதற்கான ஏற்பாடாகவே பாஜக அந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும், நாடு முழுவதும் விவசாயிகள் இச்சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். 

மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய  எதிர்க் கட்சி எம்பிக்களும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவுடன் கூட்டு வைத்திருந்த அகாலிதளம் எம்.பி தனக்கு வழங்கி இருந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  நாடு முழுவதும் இச்சட்டத்தை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், மத்திய பாஜக அரசு செய்வதறியாது அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளது. இந்நிலையில் இச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,  சட்டத்திலுள்ள  சாதகங்களை அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை, இச்சட்டம் விவசாயிகளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை, பஞ்சாபில் மட்டும் இன்னும் போராட்டம் நடக்கிறது, கள நிலவரம் என்னவெனில் விவசாயிகள் வேளாண் சட்டத்தை வரவேற்கின்றனர். இதை எதிர்க்கும் சிலரும் விரைவில் இச்சட்டத்தை புரிந்துகொண்டு ஆதரிப்பர் என அமைச்சர் ஆரவாரம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இப்பொருப்பற்ற கருத்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

click me!