மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை ஆன்லைனில் விற்க ஏற்பாடு... வானதி கேள்விக்கு பெரியகருப்பன் பதில்!!

By Narendran SFirst Published Apr 28, 2022, 5:49 PM IST
Highlights

மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை ஆன்லைனில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை ஆன்லைனில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு மே 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை இணையவழி மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு உரிய தகவல்களை மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கக் கூடிய பொருள்களிலிருந்து ஆன்லைன் மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், அரசு அலுவலகங்களுக்கு பயன்படக்கூடிய வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலம் பெற வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும். தமிழக அரசு பதவியேற்று 10 மாதங்கள் தான் ஆகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழுக்கள் வளர்ச்சியில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது திமுக ஆட்சியில் அமர்ந்த நிலையில் 20,000 கோடி கடன் வழங்க வங்கிகளுக்கு விலக்கி வைக்கப்பட்ட நிலையில் 21 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் பெறப்பட்டுள்ளது.

மேலும் வரும் ஆண்டில் 25 ஆயிரம் கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்க இலக்கு நியமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த 1 வருடத்தில் சுய உதவிக்குழுவின் மடி பஸார் டாட் காம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை ஜெம் இணைய பக்கத்தில் பதிவேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. இதன் மூலம் அரசு அலுவலகங்கள் இந்த பொருட்களை வாங்க முடியும். மேலும் விருப்பம் உள்ள உதவி குழுக்கள் தங்கள் பொருட்களை வாங்கும் விதமாக தனியார் இ காமர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் மூலம் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் விற்பனை பற்றி பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். 

click me!