ஜெயலலிதா மர்ம மரணம்... போலீசிடம் போகும் அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Jan 1, 2019, 4:56 PM IST
Highlights

தேர்தல் என்பது அதிமுகவுக்கு சர்க்கரை போன்றது, சிலருக்கு பாகற்காய் போன்றது என்று அமைச்சர் ஜெயக்குமா கூறியுள்ளார்.

தேர்தல் என்பது அதிமுகவுக்கு சர்க்கரை போன்றது, சிலருக்கு பாகற்காய் போன்றது என்று அமைச்சர் ஜெயக்குமா கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது, இன்று நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

தமிழக அரசின் முயற்சியால், புத்தாண்டு பரிசாக 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி குறைக்க வேண்டும் முதன்முதலில் குறைக்க அழுத்தம் கொடுத்தது தமிழக அரசு தான். 32 இஞ்ச் டிவி உள்ளிட்ட வசதி படைத்தவர்கள் வாங்கு பொருட்களுக்கு தான் 28 சதவீத ஜிஎஸ்டியில் உள்ளது என ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். 

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சி.வி.சண்முகம் எழுப்பிய கருத்துக்களை உதாசீனப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பது தெரிய வேண்டும் என்றார். சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் பெறுவது ஒருபுறம். போலீஸ் விசாரணை மறுபுறம். போலீஸ் விசாரணை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கவனிக்க வேண்டிய விஷயத்தில் கவனித்தால் உண்மை வெளிவரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஜெயலலிதா மரண விவகாரத்தை அதிமுக அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அரசு தரப்பில் தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் விசாரணை ஆணையத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர்கள் கூறி வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

click me!