விஜயகாந்துக்கு பத்து சீட்... வாசனுக்கு அஞ்சு பிளஸ் ஒண்ணு... ஜெயக்குமாரின் ஜெகஜால கணக்கு!

By Vishnu PriyaFirst Published Feb 24, 2019, 4:48 PM IST
Highlights

நாங்கள் மெகா கூட்டணி அமைத்ததை ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் எங்கள் கூட்டணிக்கு வர உள்ள கட்சிகளைத் தடுக்கப் பார்க்கிறார்: ஜெயக்குமார்.

* எனக்குப் பின்  தி.க. தலைவராக கலி.பூங்குன்றன் இருப்பார்.: கி.வீரமணி. (ஆமா தல, இது மூலமா ‘என் காலம் முடியும் வரை நானே தலைவர்’ன்னு சொல்லாம சொல்லியிருக்கிங்க.   பெரியார் பேரைச் சொல்லி ஊருக்கெல்லாம் ஆயிரம் உபதேசம் நாம பண்ணினாலும், நமக்குன்னு வர்றப்ப அதையெல்லாம் மதிக்கக் கூடாது. கழகத்துல உள்ள தொண்டர்களை ‘தாலி அறுப்பு’ நிகழ்ச்சி பண்ன வைக்கிறதும் ஆனா நம்ம குடும்பத்து பெண்கள் தாலிகட்டி கல்யாணம் பண்ண அனுமதிக்கிறதும் நம்ம இயல்புதானே. அதேமாதிரி அடுத்த நபருக்கு வழிவிடாம கடைசி வரைக்கும் நாமளே ஆண்டு அனுபவிக்கிறதும்தானே மிகச் சிறந்த கொள்கைப் பிடிப்பு.)

* யார் அது எடப்பாடி? என்று எங்கள் கட்சியினரே வியப்பாக கேட்டனர். ஆனால் இன்று அம்மா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துவதன் மூலம் மிகச்சிறந்த முதல்வராக பெயரெடுத்துள்ளர் இ.பி.எஸ். அவர்கள்: ஆர்.பி.உதயகுமார். (சோணமுத்தா, இப்ப என்ன வேணுமுன்னு ஸ்டிரெய்ட்டா கேட்டுட்டா சவுகரியமா இருக்கும். சசி ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி, மொட்டை போட்டு ‘முதல்வர் சின்னமா வாழ்க’ன்னு கோஷம்போட்டது நீங்கதானே தெய்வமே?)

* எம்.ஜி.ஆர். கொடுத்த இரட்டை இலையை இரண்டாகப் பிய்த்துவிட்டனர். ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் கொண்டாடும் இவர்கள், அவர் இறந்த நாள் எது? என சரியாக சொல்லிட முடியுமா! இது எவ்வளவு பெரிய மரணம், எவ்வளவு பெரிய துரோகம்?: கமல்ஹாசன். (க்கும் அதானே, என்னடா ஒலகம் வாய தொறக்கலையேன்னு நினைச்சுட்டு இருந்தோம். ஏதோ அந்தம்மாவோட பொறந்த நாளன்னைக்குதான் அவங்க படத்த தொடச்சு, நாலு பூ போட்டு, ஏதோ  ஊதுபத்தி கொளுத்துறாய்ங்க. அதுவும் உங்களுக்கு புடிக்கலையா ராசா?)

* ராமதாஸுடன் இனி எங்களுக்கு என்றுமே கூட்டணி இல்லை. பா.ம.க.வுடன் மட்டுமில்லை, இனி எந்த சாதி கட்சியோடும் கூட்டணி இல்லை: வன்னியரசு. 
(அடேங்கப்பா சாதி ஒழிப்புல பெரிய வீரர்களா வளர்ந்துட்டீங்க போலிருக்கே. சாதி வேண்டாம்னா,  உங்க கட்சியில தலித்துகள் உறுப்பினரா இருக்க வேண்டாமுன்னு சொல்லிடுங்க, தலித் நிர்வாகிகளை பதவியிலிருந்து நீக்கிடுங்க, இதையெல்லாம் விட தனி தொகுதிகளில் நிற்கவே நிற்காதீங்க. பொதுவா மாறுங்க, அப்புறம் பேசுங்க.)

* நாங்கள் மெகா கூட்டணி அமைத்ததை ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் எங்கள் கூட்டணிக்கு வர உள்ள கட்சிகளைத் தடுக்கப் பார்க்கிறார்: ஜெயக்குமார். (இதெல்லாம் ஒரு பிரச்னையாண்ணே, பேசாம கேப்டனை பார்க்க நீங்களும் கெளம்பிப் போங்க, அவருக்கு ஒரு பத்து பிளஸ் ரெண்டுன்னு சீட் ஒதுக்குங்க, அப்டியே வாசனுக்கு அஞ்சு பிளஸ் ஒண்ணுன்னு ஒதுக்குங்க. ஏ.சி.எஸ்.ஸுக்கு ஒரு நாலு, பி.ஜே.பி.க்கு எக்ஸ்ட்ராவா ஒரு அஞ்சு கொடுத்துடுங்க. அவனவன் அரண்டு, நெகிழ்ந்து உங்க கூடவே செட்டிலாகிடுவாங்க. எங்கேயும் நகர மாட்டாங்க. நம்ம இலக்கு நாடாளுமன்றம் இல்லையே, சட்டமன்ற இடைத்தேர்தல்தானே?)

click me!