"ஜெ" குறித்து பகீர் கிளப்பும் அமைச்சர் சி.வி சண்முகம்..! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!

By thenmozhi gFirst Published Dec 31, 2018, 3:20 PM IST
Highlights

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை பற்றி பல்வேறு திடுக்கிடும் கேள்விகளை எழுப்பி யுள்ளார் அமைச்சர் சி.வி சண்முகம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை பற்றி பல்வேறு திடுக்கிடும் கேள்விகளை எழுப்பி யுள்ளார் அமைச்சர் சிவி ஷண்முகம்.
அதன்படி, 

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை, மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? என கேள்வி எழுப்பி உள்ளார். 

ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார். அவருக்கு ஏன் ஆஞ்சியோ செய்யவில்லை. ஒருவருக்கு இதயம் பிரச்னை என்றால் உடனடியாக ஆஞ்சியோ செய்வது மிகவும் எளிதானது. இதை தான் எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் செய்கிறார்கள். சாதாரண மக்கள் கூட சரியான சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள் என புது ட்விஸ்ட் போட்டு உள்ளார்.

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்யவேண்டாம் என சொன்னது யார்? 

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள்,ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்து உள்ளார். 

ஜெயலலிதா மரணம் குறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர்  தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மரணம் பற்றி முழு விசாரணை வேண்டும் என்பதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி  தலைமையில் விசாரணை  நடைப்பெற்று வரும் சமயத்தில், திடீரென இவ்வாறு ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டு உள்ளார்  அமைச்சர். இந்த விசாவகாரம் தற்போது தமிழக அரசியலில் சூடு பிடித்து உள்ளது.

click me!