மாடு பிடிக்க வரணும் துரைமுருகன்: வம்பிழுத்த அமைச்சர்

By Vishnu PriyaFirst Published Feb 19, 2020, 5:41 PM IST
Highlights

அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என அழைக்கின்றனர். அவர் எப்போது மாடுபிடித்தார்? எந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டார்? -துரை முருகன் (தி.மு.க. பொருளாளர்)

* இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழ்நாட்டில் எந்த சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்? பாதிக்கப்பட்டவர் யாராவது ஒருவர் இருந்தால் கூறுங்கள். தவறான தகவல்களை கூறி, அமைதியாக வாழும் மக்களிடம் பிரச்னைகளை ஏற்படுத்துகிறீர்கள்.  நாங்கள் உங்களைப் போல் நடிக்கவுமில்லை, நாடகமாடவுமில்லை. இந்த விஷயத்தில் முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. (தி.மு.க.வை மீது ஆவேசமாக குற்றம் சாட்டிய போது)-    எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

* பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான், பாதுகாப்பு படையில் பெண்கள் நிரந்தரமாக செயல்படலாம் என உத்தரவிட்டு, பாலின நீதியை உறுதி செய்தது. இது தெரியாமல் ராகுல்காந்தி கருத்து தெரிவித்து வருகிறார். ஒருவருடைய திருமணத்தில், அதற்கு சம்பந்தமே இல்லாதவர் அளவுக்கு அதிகமாக மூக்கு நுழைப்பது போல் உள்ளது ராகுலின் செய்கை. -    ஸ்மிருதி இரானி (மத்தியமைச்சர்)

* குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை. மக்கள் தொகை பதிவேடு என்பது மக்கள் தொகை கணப்பெடுப்பு போன்றதுதான். ஆனால் தேசிய குடியுரிமை பதிவேடு என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமில்லாமல் இந்துக்கள், தலித்கள், பழங்குடியின மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்த கூடும். அது பற்றி மத்தியரசு எதுவும் கூறவில்லை. அதை கொண்டுவரவும் மாட்டார்கள். -    உத்தவ் தாக்கரே (மஹாராஷ்டிரா முதல்வர்)

* அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என அழைக்கின்றனர். அவர் எப்போது மாடுபிடித்தார்? எந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டார்?-துரை முருகன் (தி.மு.க. பொருளாளர்)

* ஜல்லிக்கட்டு நடத்த, 24 மணி நேரத்தில் அவசர சட்டம் பிறப்பித்து, அனுமதி பெற்றுத் தந்ததால் துணை முதல்வரை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கிறோம். விரைவில் விராலி மலையில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. எதிர்கட்சி துணைத்தலைவரான துரைமுருகன் அங்கே பார்வையாளராகவும் வரலாம், மாடுபிடி வீரராகவும் வரலாம். -டாக்டர் விஜயபாஸ்கர் (தமிழக அமைச்சர்)

* தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள், மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குல தெய்வ வழிபாடுகளை, திருவிழாக்களாக பல நூறு ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். ஆனால் சில ஆண்டுகளாக இரவு 10 மணிக்கு மேல் கோவில் விழாக்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என போலீஸ் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இரவு பத்து  மணி என்பதை அதிகால 2 மணி வரை என மாற்ற வேண்டும். -    வைகோ (ராஜ்யசபா எம்.பி.)

* திராவிட இயக்கங்கள் குறித்தும், ஈ.வெ.ரா குறித்தும் பா.ஜ.க. தலைவர்கள் விமர்சிப்பதைப் பார்த்து மனம் தாங்காமல் அவதூறாக பேசிவிட்டேன். நான் பேசியது யாருக்கும் மன வருத்தத்தை அளித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். -    ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க. அமைப்புச் செயலாளர்)

* குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்குதான் எதிரானது என நினைத்து, கிறுத்தவர்கள் போராடாமல் அமைதியாக உள்ளனர். மோடி அரசு, பிரிவினையை ஏற்படுத்தி, கிறுத்துவர்களையும் பழிவாங்கும். எனவே விழித்துக் கொள்ளுங்கள் கிறுத்தவ மக்களே. உங்களின் உரிமையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். -    திருமாவளவன் (லோக்சபா எம்.பி.)

* ஈ.வெ.ரா, அண்ணாதுரையை நான் பார்த்ததில்லை. எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். தன் படங்களில் பெரியார் மற்றும் அண்ணாவின் ஆண்டான் - அடிமை, ஜாதி வேற்றுமை, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு ஆகிய கருத்துக்களைப் பரப்பியவர் எம்.ஜி.ஆர். அவரது படங்களைப் பார்த்துதான் எங்களின் சிந்தனை அறிவை வளர்த்துக் கொண்டோம் நாங்கள். -கடம்பூர் ராஜூ (தமிழக அமைச்சர்)

* டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தது அ.தி.மு.க. அந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய முஸ்லீம்களில் சில ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், முஸ்லிம்களுக்கு ஒரு ஆபத்து என்றால் நாங்கள்தான் தலையிடுவோம், தீர்த்து வைப்போம்! என ரெட்டை வேடம் போடுகிறது இந்த அரசு. -கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

click me!