போலீஸ் அதிகாரிகளை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய அமைச்சர் !! தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு !

By Selvanayagam PFirst Published Mar 30, 2019, 11:14 AM IST
Highlights

பிரச்சாரத்துக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அருகே தொண்டர்களை நெருங்கவிடாமல் தடுத்த போலீஸ் அதிகாரிகளை அமைச்சர் சண்முகம் தாறுமாறாக திட்டித் தீர்த்தார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். திண்டிவனம் காந்தி சிலை அருகில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அங்கு கட்சியினர் தொண்டர்களை அழைத்து வந்திருந்தனர். 

ஆனால் தொண்டர்களை போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி பேசும் இடத்திற்கு வெகு தூரமாக நிறுத்தியிருந்தனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் உள்ளே வராதவாறு ஏன் இதுபோன்று தடுப்பு அரண்களை அமைத்துள்ளீர்கள் என டிஎஸ்பி சிலம்பரசனை திட்டித் தீர்த்தார்.

பிறகு தடுப்புகளை அகற்றி தொண்டர்களை உள்ளே வருமாறு அழைத்தார். முதல்வர் பழனிசாமியின் வாகனம் நின்று பிரசாரம் செய்யும் இடத்தின் அருகிலேயே தொண்டர்களை நிற்க வைத்தார். 

இந்நிலையில் அங்கு  வந்த முதலமச்சர் எடப்பாடி  பழனிசாமி, தொண்டர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். இதன்பின்னரும், முதலமைச்சருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரியையும் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக திட்டினார். இது காவல் துறை அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியயுள்ளது

click me!