முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து..

Published : Jun 19, 2022, 01:53 PM ISTUpdated : Jun 19, 2022, 01:54 PM IST
முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து..

சுருக்கம்

முதலமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” நாளை நடக்கவிருக்கும் ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் நாளை மறுநாள் திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் முதலமைச்சருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் கலந்துக்கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இவற்றிக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவாதம்..! முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்- ஓபிஎஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!