Metroman Sreedharan: வந்த வேகத்திலேயே திரும்பிய ஸ்ரீதரன்.. BJP குட்டை பாய் சொல்லி அரசியலுக்கு முழுக்கு.!

By vinoth kumarFirst Published Dec 17, 2021, 11:03 AM IST
Highlights

மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன், டெல்லி மெட்ரோவின் முன்னாள் தலைவராக இருந்தவர். மேலும் ஜெய்ப்பூர், லக்னோ, கொச்சி ஆகிய மெட்ரோ ரயில் திட்டங்களில் மூத்த பொறியாளராகவும் பணியாற்றியவர். பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீதரன், கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தபோது வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது வெற்றி பெற்றிருந்தாலும் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டு பெரிதாக எதுவும் செய்திருக்க முடியாது என உணர்கிறேன் என மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 

மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன், டெல்லி மெட்ரோவின் முன்னாள் தலைவராக இருந்தவர். மேலும் ஜெய்ப்பூர், லக்னோ, கொச்சி ஆகிய மெட்ரோ ரயில் திட்டங்களில் மூத்த பொறியாளராகவும் பணியாற்றியவர். பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீதரன், கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போது கேரளா சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் என்று பாஜக அறிவித்த உடனே அதை திரும்ப பெற்றது. 

இந்நிலையில், மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- நான் தீவிர அரசியலில் இனி ஈடுபடப்போவதில்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது. நான் அரசியலைக் கைவிடக் காரணம் எனக்கு அதில் விருப்பமில்லை என்பது மட்டுமே. எனக்கு 90 வயதாகிவிட்டது. நான் எப்போதுமே அரசியல்வாதியாக இருந்ததில்லை. ஒரு ஆட்சிப்பணியாளராகவே அரசியலில் இணைந்தேன்.

மேலும், மக்கள் சேவைக்காக அரசியலைக் கடந்து மூன்று தொண்டு நிறுவனங்களை நான் நடத்துகிறேன். முதன்முறையாக நான் தோற்றபோது வருத்தமாக இருந்தது. ஆனால், வெற்றிப் பெற்றிருந்தாலும் பயன் இருந்திருக்கப் போவதில்லை. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல், ஒரு கட்சியின் ஒற்றை எம்.எல்.ஏ.வாக இருந்து என்ன செய்துவிட முடியும் என்றார்.

click me!