உடனே அமைச்சர்கள், அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பு வையுங்க.. நெருக்கடி கொடுக்கும் டிடிவி. தினகரன்..!

Published : Feb 25, 2022, 08:37 PM IST
உடனே அமைச்சர்கள், அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பு வையுங்க.. நெருக்கடி கொடுக்கும் டிடிவி. தினகரன்..!

சுருக்கம்

உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

மாநில அளவில் ஒருங்கிணைப்பு அலுவலரை தமிழக அரசு நியமித்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி மற்றும் அதிகாரிகளை வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் நேரடி தொடர்பில் இருந்து இதற்கான பணிகளை முடுக்கிவிட செய்யவேண்டும்.

தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை உடனடியாக டெல்லிக்கு அனுப்பி வைத்து, உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்கத் தேவையான சிறப்பு விமானம் உள்ளிட்ட அத்தனை ஏற்பாடுகளையும் செய்திடுவதற்கும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!