10.5% இட ஒதுக்கீடு... ஜெயிச்சிட்ட மாறா... ராமதாஸை கொண்டாடும் வன்னியர் சமுதாயம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 27, 2021, 11:14 AM IST
Highlights

#ThankYouDrAyya என்கிற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

வன்னியர் 10.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, ராமதாஸுக்கு நன்றி தெரிவித்து இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில்’’தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.5% இட ஒதுக்கீட்டை 26.2.2021 முதல் நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.5% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது.

பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும். வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள்’’என ராமதாஸ் கூறியுள்ளார். 

you won it pic.twitter.com/Minnw1haGC

— இடஒதுக்கீடு (@Cris1Gopal)

 

இந்நிலையில் #ThankYouDrAyya என்கிற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

click me!