இந்த குடும்பம் இப்படி ஆனதுக்கு அவ தான் காரணம்... எல்லாம் அந்த அந்த பொண்ணு வந்த நேரம்... சசியிடம் கொளுத்திப் போட்ட மன்னார்குடி பெருசுகள்!

 
Published : Mar 29, 2018, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
இந்த குடும்பம் இப்படி ஆனதுக்கு அவ தான் காரணம்...  எல்லாம் அந்த அந்த பொண்ணு வந்த நேரம்...  சசியிடம் கொளுத்திப் போட்ட மன்னார்குடி பெருசுகள்!

சுருக்கம்

mannarkudi family members are angry against Keerthana Vivek

நடராஜன் மறைவை அடுத்து படத்திறப்பு நிகழ்ச்சிக்கான வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, சசிகலாவுக்குக் கணவர் இறந்த துக்கத்துக்கான தாக்கம் இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். சுதாகரனுக்குத் திருமணமான சமயத்தில் நடந்ததைப்போல தற்போது ஜெயா டிவி CEO விவேக்குக்கும் திருமணமானதும் நம்ம குடும்பத்துக்கு ரொம்பவே இழப்பை சந்திக்கிறோம். இதற்க்கெல்லாம் விவேக் மனைவிதான் காரணம் என மன்னார்குடி பெருசுகள் கொளுத்திப் போட்டுள்ளதாம்.

இதுகுறித்து, மன்னார்குடி வட்டாரங்களுக்கு நெருக்கமான சிலர் இந்த விஷயத்தை அரசல் புரசலாக பேசுகிறார்களாம், அது என்னன்னா? “சிறையிலுள்ள சுதாகரனுக்குத் திருமணமானபோது வழக்குகள் ரூபத்தில் நிறைய சிக்கல்கள் வந்தன.

அதேபோல தற்போது விவேக்குக்கு திருமணம் நடந்துள்ள நிலையில், கீர்த்தனா வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை... அந்த அம்மா 75 நாளு ஆஸ்பத்திரில இருந்து இறந்துட்டாங்க... இதுக்கு அப்றமா உங்களுக்கு எதிரே இருந்த முதலமைச்சர் நாற்காலியும் கெடைக்காம போயிடுச்சு..

சொத்துக் குவிப்பு வழக்குல சிறைவாசம்... கட்சியில் தீர்க்கமுடியாத குழப்பம், குடும்பத்தில குடுமிப்பிடி சண்டை, இப்போ குடும்பத்தின் முதுகெலும்பாய் இருந்த உம் புருசனும் இறந்துட்டாப்புல இதெல்லாம் பத்தாதுன்னு அவளோட புருஷனுக்கே இப்போ சிக்கல் (சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ்

இந்தியர்கள் பிரிவில் சட்டப்படிப்பில் சேர்வதில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு வழக்குப் பதிவு அதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் ஸ்பான்சர் கோட்டாவில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் சேர்ந்ததாகவும்  தற்போது பிரச்சனை கிளம்பியுள்ளது) என இந்த விஷயத்தை சசிகலாவிடம் மன்னார்குடி பெரிசுகள் கதை கட்ட ஆரம்பித்துள்ளது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஏதோ யோசித்தபடியே இருக்கிறாராம் சசிகலா.
இப்படி இந்த பெருசுகள் கொளுத்திப் போட்டாலும், எப்போதுமே நடராஜனின் நினைவாகவே இருக்கிறாராம் சசிகலா. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!