தேசப்பற்றை ஊட்டுமாறு சுதந்திரதினம் கொண்டாடுங்கள்… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு; முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு....

Asianet News Tamil  
Published : Aug 13, 2017, 10:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
தேசப்பற்றை ஊட்டுமாறு  சுதந்திரதினம் கொண்டாடுங்கள்… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு;  முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு....

சுருக்கம்

Mamtha banerji

பிரதமர் மோடியின் புதிய இந்தியா திட்டத்தை நனவாக்க,  தேசப்பற்றை ஊட்டுமாறு, அனைத்து பள்ளிகளிலும் சுதந்திரதினத்தை கொண்டாட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து இந்த உத்தரவை பின்பற்றமுடியாது எனத் தெரிவித்துள்ளது.

மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மணீஷ் கார்க் சமீபத்தில் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில்,“ ஆகஸ்ட் 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சுதந்திரத்தினத்தை கொண்டாடும் வகையிலும், மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். புதிய இந்தியா திட்டமான ஏழ்மை, ஊழல், தீவிரவாதம், வகுப்புவாதம், சாதி ஆகியவை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றார்போல் சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிகளில் உறுதிமொழி ஏற்று, பல்வேறு நிகழ்ச்சிகள், வினாவிடை  போட்டிகளும் நடத்தலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால், இந்த உத்தரவை தங்களால் ஏற்க முடியாது, இது துரதிருஷ்டமானது என மேற்கு வங்காள அரசு தெரிவித்துள்ளது. மாநில,  சர்வா சிக்சா இயக்கத்தின் திட்ட இயக்குநர் கூறுகையில், “சுதந்திர தினத்தை மத்திய அரசின் வழி காட்டுதலின் படி கொண்டாட முடியாது’ என பதில் அளித்துள்ளார்.

இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்தறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “ மேற்கு வங்காள அரசின் பதில் என்னை அதிர்ச்சி அடைய வைக்கிறது, அது துரதிருஷ்டமானது. அவர்களிடம் இது குறித்து பேசுவேன். நாங்கள் மதச்சார்பற்ற முறையில் தான் அனுகினோம், அரசியல் திட்டத்துடன் அனுகவில்லை’’ எனத் தெரிவித்தார்.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவுடனான மோதல்..! பாகிஸ்தானை மூக்குடைத்த ரஷ்யா..! மோடியின் ராஜதந்திரம்..!
ஆடிப்போன அமெரிக்கா..! ஈரானுக்காக உளவு பார்க்க களமிறங்கிய சீன கப்பல்..!