தமிழகம் வரும் தேசிய தலைவர்கள்... மம்தா பானர்ஜி தூத்துக்குடிக்கு வருகை

 
Published : May 23, 2018, 03:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தமிழகம் வரும் தேசிய தலைவர்கள்... மம்தா பானர்ஜி தூத்துக்குடிக்கு வருகை

சுருக்கம்

mamtha banerji to come tamilnadu

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆணைக்கு எதிராக போரடிய மக்களை சுட்டுத்தள்ளியது தமிழக காவல்துறை தற்போதுதான் வட இந்திய ஊடகங்களும் வட இந்திய அரசியல் தலைவர்களும் தமிழகத்தை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக போலீசாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட தூத்துக்குடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை வருகை தர உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி கொடூர துப்பாக்கிச் சூடுகள் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழகத்தில் நடந்திருக்கும் இந்த படு பாதக படுகொலைகள் மனித நேய விரும்பிகளை அதிர வைத்துள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தூத்துக்குடி வரப் போவதாக தகவல்கள் கூறுகின்றன முன்னதாக இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் இப்போதுதான் பெங்களூரு வந்தடைந்தேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பான சம்பவத்தை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன் எனக்கூறியுள்ளார்.

தமிழக மக்களின் துக்கமான நேரத்தில் என்னுடைய பிரார்த்தனைகள் அவர்கள் பக்கம் இருக்கும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்று நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பெங்களூரில் இன்று குமாரசாமி பதவியேற்பு விழா முடிந்த பிறகு, பெங்களூரில் இருந்து மம்தா பானர்ஜி தூத்துக்குடி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!