விடிய விடிய போராட்டம் நடத்திய மம்தா பானர்ஜி…. தொண்டர்கள் சாலை மறியல்… கொல்கத்தாவில் பதற்றம் !!

By Selvanayagam PFirst Published Feb 4, 2019, 6:58 AM IST
Highlights

மத்திய அரசைக் கண்டித்து  மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி  தொங்கிய  தர்ணா போராட்டம் 6 மணி நேரமாக நீடித்தது.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணாமமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 

மேற்கு வங்க மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்ததை தொடர்ந்து, மாநில டிஜிபி, முதலமைச்சர்  மம்தா பானர்ஜி மற்றும் மேயர் ஆகியோர் கமிஷனர் ராஜிவ் குமார் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி  மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டினார்..

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி  மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டினார்..

இந்நிலையில், கூட்டாட்சி தத்துவத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி மம்தாபானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ சேனல் அருகே தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரும் பங்கேற்றார்.

தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி அதிகாலை போராட்டத்தை கைவிட்டார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டபோது திரிணாமல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

click me!