டி.டி.வி.தினகரனுக்கு செக் வைக்க இறங்கியடிக்கும் எடப்பாடி.... அதிமுக கூட்டணியில் பாமக?

By vinoth kumarFirst Published Dec 22, 2018, 1:45 PM IST
Highlights

பாமக, தினகரனுடன் கூட்டணி அமைக்கப்போவதாக எதிர்பார்த்த நிலையில் ரூட்டை மாற்றி அதிமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதாக தகவல்கள் தந்தியடிக்கின்றன.

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி அமைத்த ஒரே கட்சி என்கிற பெருமை பாமக மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அப்படிப்பபட்ட பாமக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று மண்ணைக் கவ்வியது. ஆனால் இம்முறை கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கும் பாமக, தினகரனுடன் கூட்டணி அமைக்கப்போவதாக எதிர்ப் பார்த்த நிலையில் ரூட்டை மாற்றி அதிமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதாக தகவல்கள் தந்தியடிக்கின்றன. 

அதிமுக, திமுகவுடன் பாய்ண்ட் டு பாய்ண்ட் ட்ரிப் அடித்து கூட்டணி வைத்தது பாமக. பாஜக, தேமுதிகவுடனும் கூட்டணிக் குலாவல் தொடந்தது. ஆனாலும், முதல்வர் பதவி வேட்கையால் கடந்த சடமன்றத் தேர்தலில் 3-வது அணியாக நின்று ராஜ்ஜியம் நடத்த நினைத்த பாமகவுக்கு மிஞ்சியது பூஜ்ஜியமே. ஆனாலும் மக்கள் நலக்கூட்டணியை விட சற்று கூடுதலான வாக்குகளை பிடித்ததை மறுக்க இயலாது.

இனி எக்காலத்திலும் திமுக- அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மருத்துவர்கள் காட்டிய வீராப்பை மறந்து திமுக கதவை திறகுமா? என எட்டி எட்டி பார்த்து காத்திருந்தாலும் ஸ்டாலின் ஜன்னலைக் கூட திறக்கவில்லை. 

பாஜகவுடன் பந்தல் போடலாம் என்றால் அக்கட்சிக்கு எழுந்து வரும் எதிர்ப்பு பாமகவையும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக ஒதுங்கி வருகிறார் ராமதாஸ். டி.டி.வி.தினகரன், கமல், பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் யூடர்ன் அடித்து அதிமுகவை அரவணைக்க முடிவெடுத்திருக்கிறது பாமக. 
  
சமீப நாட்களாக அதிமுகன் அமைச்சர்கள் வெளியிடும் அறைக்கைகளை மெச்சி ட்விட் போட்டு பாராட்டி வருகிறார் ராமதாஸ். இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது பாமக, மக்களவை தேர்தலில் 10 தொகுதிகளை கேட்டுள்ளது. 5 சீட்டுக்கு இசைந்திருக்கிறது அதிமுக. ஆனால், பாமக 10 சீட்களிலிருந்து இறங்கி வர மறுக்கிறதாம்.
கிட்டத்தட்ட அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதி என்கிறார்கள்.

இதனால், பாமகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்ளலாம் என கணக்கு போட்டு காத்திருந்த டி.டி.வி.தினகரன் கடும் அப்செட் ஆகி உள்ளாதாக கூறுகிறார்கள் அமமுகவினர். பாமக டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி போட்டால் அதன் மூலம் டி.டி.வியின் பலம் உயர்ந்து விடும் என்பதால்தான் பாமகவை தேடிப்போய் அதிமுக கூட்டணிக்கு அழைத்ததாகவும், பாமக முரண்டு பிடித்தால் அகட்சி கேட்கும் சீட்களை அப்படியே கொடுக்கவும் அதிமுக தயாராக உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன.

 

click me!