புலியைப் போன்றவர்கள் தமிழர்கள் என மம்தா புகழாரம்... ‘ஜெய் தமிழ்நாடு’ என கருணாநிதி சிலை திறப்பில் மம்தா முழக்கம்!

By Asianet TamilFirst Published Aug 7, 2019, 9:43 PM IST
Highlights

கருணாநிதி ஏழை எளிய, சிறுபான்மையினர் மக்களின் நலனுக்காக போராடினார். கூட்டாட்சி தத்துவத்துக்கும் ஓங்கி குரல் கொடுத்தவர் கருணாநிதி. இந்த சிலை திறப்பு விழாவில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், பரூக் அப்துல்லா தற்போது எப்படி இருக்கிறார் என்றே தெரியவில்லை. 

நான் மேற்கு வங்கத்தில் எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன், தற்போது அத்துடன் ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதையொட்டி, முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விழாவில் பங்கேற்று கருணாநிதியின் சிலையைத் திறந்துவைத்தார்.
பின்னர்  நடைபெற்ற கருணாநிதி நினைவுதின பொதுக்கூட்டத்திலும் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினார். “கருணாநிதியை நினைக்கிறபோது, அவர் நள்ளிரவில் கைது செய்த புகைப்படம்தான் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும். கருணாநிதி ஏழை எளிய, சிறுபான்மையினர் மக்களின் நலனுக்காக போராடினார். கூட்டாட்சி தத்துவத்துக்கும் ஓங்கி குரல் கொடுத்தவர் கருணாநிதி. இந்த சிலை திறப்பு விழாவில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பங்கேற்றிருக்க வேண்டும். 


ஆனால், பரூக் அப்துல்லா தற்போது எப்படி இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட முடிவை எடுக்கும் முன் அந்த மாநில மக்களின் கருத்தை மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அப்படி செய்யவில்லை. நாம் எல்லோரும் முதலில் இந்தியர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு மாநில அடையாளமும் உண்டு. அதை எப்போதும் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
தமிழர்கள் புலியைப் போன்றவர்கள்; தைரியமானவர்கள். சிறந்த நோக்கத்துக்காகப் போராடுபவர்கள். உயிரைப் பற்றி கவலைப்படாமல் போராடும் குணம் கொண்டவர்கள். தமிழர்களுக்கு மாநிலத்தின் நலமே முக்கியம். எனவே நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன். மேற்கு வங்கத்தில் எப்போதும் ‘ஜெய் பெங்கால்’ என்று நான் கூறுவேன், தற்போது அதோடு சேர்த்து ‘ஜெய் தமிழ்நாடு’ என்று கூறுகிறேன்” என்று மம்தா பானர்ஜி பேசினார். 

click me!