மாய்ந்து போகிறதா மக்கள் நீதி மய்யம்..? நிலைதெரியாமல் தவிக்கும் கமல்ஹாசன்..!

By Thiraviaraj RMFirst Published May 13, 2021, 3:03 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கட்சியில் இருந்த பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், உள்ளிட்ட பலரும் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த புதிதில் இருந்து விலகினர். மக்கள் நீதிமய்யம் நாடாளுமன்றத்தேர்தலில் மோட்டியிட்டது. அடுத்து சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டது.

 

அந்தக்கட்சி புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சிக்குள் வறட்சியை ஏற்படுத்தி விட்டது. இதனால், தேர்தல் ரிசல்ட் வந்த பின்பு பலரும் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக கமலுக்கு எல்லாமுமாக இருந்து ஏகபோகமாக செலவழித்த அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விலகினார். அதற்கு முன் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் விலகியிருந்தார். இன்னும் சில நிர்வாகிகள் விலகி இருந்த நிலையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி யுமான சந்தோஷ் பாபுவும் விலகியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகக் கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ள அவர், கமல்ஹாசனுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில், சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். சந்தோஷ் பாபுவை அடுத்து மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ’ மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சொந்த காரணங்களுக்காக விலகுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
 
யூடியூப் பிரபலமான பத்மபிரியா மதுரவாயலில் வாங்கிய வாக்குகள் 33,310. மநீம சார்பில் மதுரவாயல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட சுற்றுசூழல் பிரிவு மாநில செய்தியாளர் பத்மபிரியா  அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. இதையடுத்து அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!