
ஆளுநர்- அரசு மோதல்
தமிழகம், டெல்லி மற்றும் கேரளாவில் ஆளும் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக அம்மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு எந்தவித முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக புகார் கூறப்பட்டது. இதே போல பல்வேறு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லையென்றும், தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு சார்பாக நடைபெறும் நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை புகுத்துவதாகவும் ஆளுநர் மீது புகார் கூறப்பட்டது. இதே போல கேரளாவில் 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை பதவி விலக கோரி அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கெடு விதித்திருந்தார். இதற்க்கு கேரள அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மநீம- கண்டனம்
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதவில், பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம்.
ஆளுநருக்கு அழகல்ல
தமிழகத்திலும் இதே போக்குதான் நிலவுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்குகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர இழுத்தடிப்பது; அரசியல்சாசனம் வழங்காத" பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்