இனிமேல் வாரத்தில் 5 நாட்கள்தான் வேலை… அரசு ஊழியர்கள் கோரிக்கைக்கு அனுமதியளித்த அமைச்சரவை...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 13, 2020, 5:47 PM IST
Highlights

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை என்ற அரசு ஊழியர்களின், கோரிக்கைக்கு மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை என்ற அரசு ஊழியர்களின், கோரிக்கைக்கு மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 29ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா,காங்கிரஸ்,என்சிபி கட்சிகள் கூட்டணி சேர்ந்து மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அனைத்து மாநில அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்க வேண்டும் என அம்மாநில அரசு பணியாளர்கள் சங்கம் நீண்ட காலம் கோரிக்கை விடுத்து வந்தது. 

இதனை முதல்வர் உத்தவ் தாக்கரே பரிசீலனை செய்தவதாக உறுதி அளித்து இருந்தார்.இந்நிலையில், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி என்ற மாநில பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டும் அம்மாநில அரசு பணியாளர்கள் வேலை பார்த்தால் போதும். அதேசமயம் அவர்களது தினசரி பணி நேரம் 45 நிமிடங்கள்  நீடிக்கப்பட்டுள்ளது. காலை 9.45 மணிக்கு பணியை தொடங்கும் அம்மாநில அரசு பணியாளர்கள் மாலை 6.15 வரை வேலை பார்க்க வேண்டும். தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு பணியாளர்கள் காலை 9.45 மணிக்கு பணியை தொடங்கி மாலை 5.30 மணிக்கு நிறைவு செய்கின்றனர்.

  

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை வரும் பிப்ரவரி 29ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து, ஆண்டுக்கு 288 நாட்கள் வேலைநாட்கள் அளவு 264 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. நாள்ஒன்றுக்கு 7மணிநேரம் 15 நிமிடங்களாக இருந்தது, இனி 8 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற முறையை மத்திய அரசு ராஜஸ்தான், பிகார், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது.
 

click me!