சொன்னதை செய்த எடப்பாடி...! மாட்டுத்தாவணி போய் எம்ஜிஆர் வந்தார்...!

Asianet News Tamil  
Published : Oct 31, 2017, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
சொன்னதை செய்த எடப்பாடி...! மாட்டுத்தாவணி போய் எம்ஜிஆர் வந்தார்...!

சுருக்கம்

Madurai Mattupattinai Integrated Bus Terminal has been changed to MGR bus terminus.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்ற பெயர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என மாற்றபட்டுள்ளது. 

மதுரையில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, மதுரை பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுமென அறிவித்திருந்தார். 

அதன்படி மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இதுதொடர்பாக, மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மாட்டுத்தாவணி என்ற பெயர் நீக்கம் செய்துவிட்டு எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் பலகை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?