விவசாயி முதல்வராகலாம்... விஷவாயு ஆகக் கூடாது... எடப்பாடி பழனிச்சாமியை வறுத்தெடுத்த மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Aug 3, 2019, 7:17 AM IST
Highlights

தற்போது நாடாளுமன்றத்தில் துணை முதல்வரின் மகன் முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதே சட்டத்தை அன்வர்ராஜா எம்.பி.யாக இருந்த போது எதிர்ப்பு தெரிவித்து பேசினார். வேலூர் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால், மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து பேசிவிட்டு வெளிநடப்பு செய்கிறார். 

தமிழக முதல்வராக ஒரு விவசாயி ஆகலாம். ஆனால், விஷவாயு முதல்வராக ஆகக் கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேலூர் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். 
வேலூரில் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ஒரு விவசாயி முதல்வரானதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று பேசினார். முதல்வரின் இந்தப் பேச்சுக்கு ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பதிலடி தந்தார்.

 
குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் நடந்த பிரசாரத்தில் ஸ்டாலின் பேசும்போது, “தேர்தல் பிரசாரத்தில் நான் ஒரு விவசாயி என்று எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். விவசாயி முதல்வரானது என்னால் பொறுக்க முடியவில்லை என்கிறார். விவசாயி முதல்ராகலாம். ஆனால், விஷவாயு முதல்வராகக் கூடாது” என்று விமர்சித்து பேசினார்.

 
மேலும் ஸ்டாலின் பேசும்போது, “தற்போது நாடாளுமன்றத்தில் துணை முதல்வரின் மகன் முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதே சட்டத்தை அன்வர்ராஜா எம்.பி.யாக இருந்த போது எதிர்ப்பு தெரிவித்து பேசினார். வேலூர் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால், மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து பேசிவிட்டு வெளிநடப்பு செய்கிறார். வேலூர் தேர்தலுக்காக அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. இஸ்லாமிய மக்களின் வாக்குகளைப் பெற பிளவை ஏற்படுத்த அதிமுக முயற்சிக்கிறது. ஆனால், அது ஒரு காலத்திலும் நடக்காது.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

click me!