அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடித்தது லக்..!! 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் வழங்க அரசு நடவடிக்கை..!!

Published : Oct 23, 2020, 12:07 PM IST
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடித்தது லக்..!! 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் வழங்க அரசு நடவடிக்கை..!!

சுருக்கம்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு தமிழ்நாட்டில் 34,151 கோடி நிதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்தியாவில் அடித்தட்டில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 24 சதவீதம் மட்டும்தான்,

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில்  80 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள்  வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகர் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு தமிழ்நாட்டில் 34,151 கோடி நிதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்தியாவில் அடித்தட்டில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 24 சதவீதம் மட்டும்தான், ஆனால் தமிழகத்தில் இதன் மூலும் அதன் எண்ணிக்கை 41.6 சதவீதத்தை பெற்றுள்ளது. தமிழகம் என்றும் அமைதிப்பூங்காவாக விளங்குவதால், அண்டை நாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க முன் வருகின்றனர். ஐசிஎப் கல்விமுறையை புகுத்தி கல்வியை அம்மாவின் அரசு மேம்பாடு அடைய செய்துள்ளது. இன்று பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் கையில் உள்ள மடிக்கணினி அனைத்து பாடப்பிரிவுகளும் ஐசிடி முறையில் எளிய முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது STRT முறையால் நீட் தேர்வில் 150 கேள்விகளில் 126 கேள்விகள் இடம் பெற்றுள்ளது. நமது ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி அடைவது  என்பது முதலமைச்சரின் அமைச்சரின் சீரிய முயற்சியின் விளைவே ஆகும். இதுவரை 303 மாணவர்கள் நீட்டில் தேர்வாகி தமிழகம் வரலாறு படைத்துள்ளது. தற்போது கிராமப்புற மாணவர்களுக்கு இ-பாக்ஸ் நிறுவனம் மூலம்  நீட் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. கேளுங்கள் கொடுக்கப்படும் என்பர்கள், ஆனால் கேட்காமலேயே கொடுப்பது அம்மாவின் அரசு தான். இந்த அரசு மனிதநேயமிக்க அரசு, ஆளுமைமிக்க அரசு, நமது அம்மாவின் அரசு 7,600 ஸ்மார்ட் கிளாஸ்  அமைக்க வழிவகை செய்துள்ளது. இப்போது கரும்பலகையில் எழுதுகின்ற மாணவர்களுக்கு விரைவில் 80,000 ஸ்மார்ட்போன் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல அட்டர்டிங்கர் லேப்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞான அறிவு பெற முடியும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி