10-ஆம் வகுப்புக்கு மேல் தாண்டாதவர்களுக்கு அடித்தது லக்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்ட அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Oct 10, 2020, 1:37 PM IST
Highlights

அரசால் நேரடியாக பணி நியமனம் செய்யப்படும் பணிகளில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர் ஆகியோருக்கு வயது உச்ச வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசால் நேரடியாக நியமனம் செய்யப்படும் பணிகளில் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வயது உச்சவரம்பை 32 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பணி வயது உச்சவரம்பை 32 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் சில பணிகளுக்கு நேரடியாக நியமனம் நடக்கிறது, அப் பணிகளில் சேருபவர்களுக்கு  குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதியாக அவர்களிட் கல்வித் தகுதி பத்தாம் வகுப்புக்கு மேல் இருக்க கூடாது  என்பது நடைமுறையில் இருந்துவரும் விதிஆகும். 

அதேபோல பணியில் சேரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லிம்கள்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோருக்கு வயது உச்ச வரம்பு 30 ஆக இருந்து வந்தது, ஆனால் தற்போது அது மாற்றப்பட்டு அரசால் நேரடியாக பணி நியமனம் செய்யப்படும் பணிகளில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர் ஆகியோருக்கு வயது உச்ச வரம்பு32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

வயது உச்சவரம்பை தற்போது 32 ஆக உயர்த்தி பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை வெளியிட்டதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

click me!