1 ரூபா 2 ரூபா இல்ல....ரூ. 5 கோடியை அலேக்கா வாரி கொடுத்த லாட்டரி மார்டின்..! கஜா நிவாரணம்..!

By thenmozhi gFirst Published Nov 27, 2018, 4:56 PM IST
Highlights

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய்க்கான வங்கி காசோலையை வழங்கினார் டாக்டர் லீமா ரோஸ் மார்டின்.

1 ரூபா 2 ரூபா இல்ல....ரூ. 5 கோடியை அலேக்கா வாரி கொடுத்த லாட்டரி மார்டின்..! கஜா நிவாரணம்..! 

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய்க்கான வங்கி காசோலையை வழங்கினார் டாக்டர் லீமா ரோஸ் மார்டின்.

5 கோடி ரூபாய்க்கான வங்கி காசோலையை, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழகினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள்  பெரிதளவும் பாதித்து உள்ளனர். 

குடிக்க தண்ணீர், உண்ண உணவு, தங்க வீடு இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மக்களுக்கு உதவ சமூக ஆர்வலர்கள் முதல் ஏராளமான பொதுமக்கள் வரை நேரடியாக  களத்திற்கு சென்று உதவிகரம் நீட்டி வருகின்றனர்.

அதே போன்று சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் பலர் தங்களால் இயன்ற அளவிற்கு பண உதவியை அளித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, சரவணா ஸ்டோர் உரிமையாளர் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வரை சந்தித்து அளித்தார். இந்த நிலையில் கோயம்புத்தூரில் லாட்டரி தொழில் மூலம் பிரபல தொழில் அதிபராக விளங்கி வந்த மார்டினின் மனைவி, 5 கோடி ரூபாய்க்கான வங்கி காசோலையை, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கினார்.

லாட்டரி மார்டின், ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் மிகவும் சாதரணமாக, கட்டுப்பாடோடு லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதன் பின், கருணாநிதியின் ஆட்சியின் போது, கலைஞரின் வசனத்தில் ஒரு படத்தை இயக்கி கொடி கட்டி பறந்தார்... கூடவே தொழிலும் கொடிக்கட்டி பறந்தது.

பின்னர், மீண்டும் அம்மா ஆட்சி வந்த உடன், அவருக்கும் ஆட்டம் கண்டது. அப்போது, லாட்டரி தொழில்  மற்றும் சில ஊழல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு சின்னாபின்னாமானது அவருடைய வாழ்க்கை.அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் கருணாநிதியின் நினைவஞ்சலிக்கு குடும்பத்தோட சென்று வந்தனர் அவருடைய மனைவி டாக்டர் லீமா ரோஸ் மார்டின், டாக்டர் ஜோஸ் சார்லஸ் மார்டின்  மற்றும் அவரது மனைவி சிந்து சார்லஸ் மார்டின்.

இந்த நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, Martin charitable trust சார்பாக 5 கோடி ரூபாய்க்கான வங்கி காசோலையை முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் மற்றும் அவரது குடும்பத்தினர்.   
 

click me!