ட்விட்டரில் இன்பநிதி...!! 4-ஆம் கலைஞர் ரெடி

Published : Apr 22, 2019, 11:09 AM ISTUpdated : Apr 22, 2019, 11:32 AM IST
ட்விட்டரில் இன்பநிதி...!! 4-ஆம் கலைஞர் ரெடி

சுருக்கம்

அடுத்த வாரிசு ரெடி! ஸ்டாலினின் பேரன் இன்பநிதி இன்று ட்விட்டரில் கணக்கு தொடங்கியிருக்கிறார். யாருக்கு தெரியும் 2045 -ல் தமிழக முதலமைச்சர் இவராக கூட இருக்கலாம். 

அடுத்த வாரிசு ரெடி! ஸ்டாலினின் பேரன் இன்பநிதி இன்று ட்விட்டரில் கணக்கு தொடங்கியிருக்கிறார். யாருக்கு தெரியும் 2045 -ல் தமிழக முதலமைச்சர் இவராக கூட இருக்கலாம். 

நான்காம் கலைஞரே.! ஐந்தாவது அண்ணாவே.! 18 வயதுக்கு பிறகு கழகத்தை வழிநடத்தும் அஞ்சா நெஞ்சமே வருக வருக... இப்படியான ஒரு வாசகம்  ட்விட்டரில் லாக் இன் பண்ணி உள்ளே, சென்றதும் கண்ணில் தென்பட்டது நோட்டிபிகேஷன், அதாவது நான் பின் தொடரும் ஒருவர் ரீடிவீட் செய்திருந்தார். அதை க்ளிக் செய்து பார்க்கையில் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், முகத்தை திருப்பிக்கொண்டு ஒரு போட்டோ போட்டிருந்த உதயநிதி " Look who is in twitter now ! Inban! @IUdhayanidhi " அவர் டேக் செய்திருக்கும் பெயரை தொடர்ந்தால், ஒரு குட்டிப்பையன், மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள ஒரு போட்டோ பெயரைப் பார்த்தால், இன்பன் உதயநிதி, ஆமாங்க திமுக தலைவர் ஸ்டாலினின் பேரன், உதயநிதியோட மகன் தான் அவர்.  

ஆக, அடுத்த தலைமுறையை அரசியலில் இறக்கி விட்டுள்ளது கோபாலபுர குடும்பம் என ட்விட்டரில் கமாண்ட்ஸ் பறக்கிறது. 

உங்க பையனையாவது சாமானியனா வளர்க்க ஆரம்பியுங்கள்.
மிகப்பெரிய பின்புலத்தை காமித்து வளர்க்காதீர்கள்.என்றும், கருணாநிதி வாரிசு, தமிழ் பேசிய நாட்டை புடிச்சி உங்களுக்கு அங்கீகாரம் தந்த மனுசன்யா அவரு, முதல் பதிவே @IUdhayanidhi ஆங்கிலத்தில் போடுவது ஏற்புடையதா?  இது தான் தமிழ் மக்கள் மீது நீங்கள் காட்டும் நன்றி உணர்வா!!! என்பது போன்ற கமெண்ட்ஸும் போட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!