என்னை மன்னித்து விடுங்கள்... இதை தவிர வேறு வழியில்லை... பிரதமர் மோடி உருக்கமான பேச்சு..!

By vinoth kumarFirst Published Mar 29, 2020, 12:31 PM IST
Highlights

கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. நான் எடுத்த முடிவால் என்மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழி இல்லை. மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள். 

நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என  பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழியில்லை என்றார். 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலக முழுவதும் 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  6.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பத்துவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கூறியதால் ஏழ்மை மக்கள் உணவு இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

இந்நிலையில், மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார். 

கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. நான் எடுத்த முடிவால் என்மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழி இல்லை. மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கம்.  சேவை செய்து வரும் நீங்களும் கவனமாக இருங்கள். கொரோனா மனித குலத்திற்கே சவாலான ஒன்று, கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் என முழு நம்பிக்கை உள்ளது, பயப்பட வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

click me!