நாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Oct 27, 2020, 4:55 PM IST
Highlights

கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் அக்டோபர் 31ம் தேதி வரை இருந்த  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

 மேலும், செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட 6 ம் கட்ட பொதுமுடக்க தளர்வு விதிமுறைகள் தொடரும் என்றும் அதேநேரத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடையில்லை என்றும் வேறு மாநிலங்கள் செல்ல இ-பாஸ் பெறத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் 30 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

click me!