ஆளுங்கட்சி தலைமைக்குள் ஈகோ யுத்தத்தை கிளப்பும் ஸ்டாலின்... எடப்பாடியை டம்மியாக்கி.. வேலுமணிக்கு கொம்பு சீவி..!

By Vishnu PriyaFirst Published May 5, 2019, 2:11 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விடவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விடவும், தங்கமணி மற்றும் ஜெயக்குமார் போன்ற சீனியர் அமைச்சர்களை விடவும் வேலுமணியே தில்லானவர், அதிகாரம் படைத்தவர், அரசு முடிவையெ தன்னிச்சையாக எடுப்பவர் என்பது போல் ஒரு சீனை உருவாக்கி, ஆளும் அதிகார மையத்தினுள் ஒரு ஈகோ யுத்தத்தை உருவாக்கிட அடித்தளம் போட்டிருக்கிறார் ஸ்டாலின்.

இன்னும் இரண்டு மாதங்களில் இந்த ஆட்சி கவிழும், இன்னும் நாற்பது நாட்களில் இந்த ஆட்சி கவிழும்...என்று வாய் வலிக்காமல், சலிப்பே தட்டாமல் சொதப்பல் ஜோஸியம் கூறிக்கொண்டே இருக்கிறார்! என்று கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் ஸ்டாலின் இப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக புது ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். அது, ஆளும் அதிகார மையத்தினுள் ஈகோ யுத்தத்தை உருவாக்கும் முயற்சிதான். 

‘இப்போதைய சூழலில் உள்ளாட்சி தேர்தல் நடத்திட வாய்ப்பே இல்லை.’என்று தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சொல்லியிருப்பதை வைத்து புது விளையாட்டை துவக்கியிருக்கிறார் ஸ்டாலின். ”சுதந்திரமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையரை, அ.தி.மு.க. அரசு தனது பவர் ஏஜெண்ட் போல் செயல்பட வைப்பது வெட்கக்கேடானது. எல்லாம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அதிகாரம்தான். டெண்டர்களில் கமிஷனை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுக்கும் உள்நோக்கத்துடன் தான் வேலுமணி இந்த தேர்தல் நடத்தப்பட இருப்பதை தள்ளித் தள்ளிப் போடுகிறார்.” என்று கூறியுள்ளார். 

இதைத்தான் கையிலெடுத்து பேசும் அரசியல் விமர்சகர்கள் “உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட முடிவெடுத்தது ஒட்டுமொத்தமாக ஆளும் அதிகார மையம்தான். ஆனால் ஸ்டாலினோ என்னமோ அமைச்சர் வேலுமணிதான் இந்த முடிவை எடுத்துள்ளார், அவர்தான் தேர்தல் ஆணையத்தை ஆட்டிப்படைக்கிறார், தங்கள் பவர் ஏஜெண்டு போல் தேர்தல் கமிஷனை வைத்திருக்கிறார், டெண்டர்களின் கமிஷனை முழுமையாக வளைக்கும் அதிகாரம் வேலுமணிக்குதான் உள்ளது! என்பது போல் தனது பேச்சில் ஒரு மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விடவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விடவும், தங்கமணி மற்றும் ஜெயக்குமார் போன்ற சீனியர் அமைச்சர்களை விடவும் வேலுமணியே தில்லானவர், அதிகாரம் படைத்தவர், அரசு முடிவையெ தன்னிச்சையாக எடுப்பவர் என்பது போல் ஒரு சீனை உருவாக்கி, ஆளும் அதிகார மையத்தினுள் ஒரு ஈகோ யுத்தத்தை உருவாக்கிட அடித்தளம் போட்டிருக்கிறார் ஸ்டாலின். ஒரு சென்சிடீவ் விவகாரத்தில் வேலுமணியை மட்டுமே ஸ்டாலின் குற்றம் சாட்டி இருப்பதால், மீடியா மற்றும் அரசியல் மையங்களின் பார்வை முழுக்கவே வேலுமணி மீதே பரவும், எடப்பாடியை கண்டு கொள்ள மாட்டார்கள்.

இதனால் எடப்பாடிக்கு ஈகோ பிரச்னை உருவாகி, வேலுமணியின் பவரை பிடுங்குவார், இதற்கு வேலுமணி கடும் ரியாக்‌ஷன் காட்டுவார், இப்படியாக அதிகார மையத்தினுள் சிக்கல்கள் உருவாகி, அவர்களது சரிவுக்கு அவர்களே வழி தேடுவார்கள், என்பதே ஸ்டாலினின் கணிப்பு. ஆனால் இது சக்ஸஸ் ஆகுமா என்பது பெரிய டவுட்டே!” என்கிறார்கள். தளபதி, உங்க ஓப்பனிங்கெல்லாம் நல்லாதான் இருக்குது. ஆனா ஃபினிஷிங்தான் ஊத்திக்குது.

click me!