கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! தபால் வாக்குகளில் காங்கிரஸ் முன்னிலை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 16, 2020, 10:04 AM IST
Highlights

கேரளாவில் மூன்ற கட்டமாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் மூன்ற கட்டமாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கிராம பஞ்சாயத்துகளில் காங் முன்னணியில் உள்ளது. தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில்  இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

கேரள மாநிலத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி  தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி என மூன்று கட்சிகளும்  தேர்தலில் களமிறங்கியிருந்த நிலையில், மும்முனை போட்டி நிலவியது. கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா,  இடுக்கி ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 8-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும்,  பாலக்காடு, வயநாடு, திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 10ஆம் தேதியும், அதேபோல் டிசம்பர் 14ஆம் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கன்னூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. 

மொத்தம் 78.62 சதவீதம் பேர் வாக்களித்தனர், முதல் கட்ட வாக்குப் பதிவில் 75% பேரும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 76.78 சதவீதம் பேரும் வாக்களித்தனர். மூன்றாம் கட்டத்தில் 78.62 சதவீதம் பேரும் வாக்களித்திருந்தனர். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு பெட்டிகள், அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் அதை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கியது. மொத்தம் 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது, காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. மாநகராட்சிகளில் இடது முன்னணி முன்னணி வகிப்பதாகவும், கிராமப் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

click me!