இரு கட்டங்களாக எங்கெங்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்...? வெளிப்படையாக எதையும் அறிவிக்காத தேர்தல் ஆணையம்!

By Asianet TamilFirst Published Dec 9, 2019, 6:51 AM IST
Highlights

27ம் தேதியும் 30ம் தேதியும் எங்கெங்கு தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் எந்தத் தகவலும் இல்லை. தேர்தல் இரண்டு கட்டங்களாக எங்கு நடக்கின்றன என்ற  தகவலை ஆணையம் இதுவரை இணையத்தில் பதிவேற்றவில்லை. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், எந்தெந்த ஊராட்சிகளுக்கு தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது என்ற பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.


 நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், புதிதாக உருவான மாவட்டங்களில் எல்லைகள் மாறியிருப்பதால், வார்டு மறுவரையறை செய்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த தடைவிதித்த நிலையில், எஞ்சிய மாவட்டங்களில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.


இதனையடுத்து ஏற்கனவே அறிவித்த தேர்தல் அட்டவணையை திரும்ப பெற்ற தேர்தல் ஆணையம், மீண்டும் ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், 27ம் தேதியும் 30ம் தேதியும் எங்கெங்கு தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் எந்தத் தகவலும் இல்லை. தேர்தல் இரண்டு கட்டங்களாக எங்கு நடக்கின்றன என்ற  தகவலை ஆணையம் இதுவரை இணையத்தில் பதிவேற்றவில்லை. எதிர்க்கட்சிகள்கூட இந்த விஷயத்தை இன்னும் எழுப்பவில்லை. மாநில தேர்தல் ஆணையம் சுயேட்சையாகச் செயல்படவில்லை; வெளிப்படைத்தன்மை இல்லை என்று தொடர்ந்து பல தரப்பினரும் புகார் கூறிவரும் நிலையில், பொதுவெளியில் பட்டியலை இன்னும் வெளியிடாதது சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.

click me!