திமுகவில் அப்படி... அதிமுகவில் இப்படி... கூட்டணி கட்சியினர் அட்ராசிட்டி..!

Published : Feb 18, 2021, 11:05 AM IST
திமுகவில் அப்படி... அதிமுகவில் இப்படி... கூட்டணி கட்சியினர் அட்ராசிட்டி..!

சுருக்கம்

அ.தி.மு.க.,வினர், 'டாக்டர் ராமதாஸ், இன்னும் நமது கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை. அதற்குள் இவர், இப்படி சொல்லிக் கொண்டு வலம் வருகிறாரே’ என அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சில தொகுதிகளை குறிப்பிட்டு, தி.மு.க., தலைமையிடம் பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தொகுதியை, வெளிச்சம் டிவி இயக்குனர் பனையூர் பாபுவுக்கு கேட்டிருக்கிறார்கள். 

அந்தத் தொகுதி தற்போதுப தி.மு.க., எம்.எல்.ஏ., வெற்றிபெற்ற சிட்டிங் தொகுதி. அதனால், அந்த தொகுதியை தர முடியாது எனக்கூறிய தி.மு.க., நிர்வாகிகள், பட்டியலில் இருந்தே செய்யூரை அடித்து விட்டார்கள். இதனால், விடுதலை சிறுத்தைகள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இது இப்படி இருக்க அதிமுக கூட்டணியிலும் ஒரு மேட்டர் ஓடிக்கொண்டு இருக்கிறது.

 

பா.ம.க., மருத்துவர் அணி மாநிலச் செயலர் டாக்டர் வைத்தியலிங்கம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டசபை தொகுதியில், பா.ம.க., சார்பில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு, தோற்று விட்டார். தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில், நமக்கு திருத்தணியை ஒதுக்கி விட்டார்கள். நான் தான் களமிறங்க போகிறேன். எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். ஒன்றியம், நகர அளவில் தேர்தல் அலுவலகங்கள் திறக்க வேண்டும்’என கட்சியினரை முடுக்கி விட்டுக் கொண்டு இருக்கிறார். 

இதை கேள்விப்பட்ட அ.தி.மு.க.,வினர், 'டாக்டர் ராமதாஸ், இன்னும் நமது கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை. அதற்குள் இவர், இப்படி சொல்லிக் கொண்டு வலம் வருகிறாரே’ என அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?